ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான்

அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான்

ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பொழுதுபோகல உடனே புலி வருது புலிவருதுனு கத்தினான்

அந்த சத்தத்தை கேட்ட பக்கத்து தொட்டத்து வேலையாட்கள் ஓடி வந்தாங்க
எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க

ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான்
இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட திரும்ப வேலைக்கு போனாங்க
இத பத்து சிரிச்ச ராமு அடிக்கடி புலிவருது புலிவருதுனு அவுங்கள ஏமாத்த ஆரம்பிச்சான்
ஒருநாள் காலைல நிஜமாவே புலி வந்து ராமுவை தாக்க பாத்துச்சு உடனே ராமு புலிவருது புலிவருதுனு கத்தினான் ,ஆனா முற அவனக்காப்பாத்த யாரும் வரல

சாயங்காலம் ஆடுமேய்க்க போன சின்ன பையன காணோம்னு தேடி எல்லோரும் வந்தாங்க
புளியல தாக்கப்பட்டு உயிருக்கு போராடிகிட்டு இருந்த ராமுவை பாத்தாங்க
அடடா நீ சொன்ன பொய் உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்கிடுச்சு பாத்தியா இனிமே பொய்ச்சொல்லதான்னு சொல்லி அவனை காப்பாத்துனாங்க