The Rose & the Butterfly – ரோஜாவும் பட்டாம்பூச்சியும்-Aesop Fables in Tamil :- ஒரு காட்டுல ஒரு அழகான ரோஜா இருந்துச்சு அதுக்கு ஒரு பட்டாம்பூச்சி நண்பரும் இருந்துச்சு
ஒருநாள் வெளியில போன பட்டாம்பூச்சி திரும்பி வர்றப்ப ,ரோஜா தீனி கூட நட்பா இருக்குறத பார்த்துச்சு
உடனே அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரே வருத்தமா போச்சு ,உடனே அந்த ரோஜா கூட சண்டைக்கு போச்சு பட்டாம்பூச்சி
அதுக்கு அங்க ரோஜா சொல்லுச்சு நீ ஏன் நான் இன்னொருத்தர் கூட நட்பா இருக்குறத விரும்ப மாட்டுற
நான் சுரக்கிற தேன் எல்லாத்தையும் சேகரிச்சு மனிதர்களுக்கு கொடுத்து நான் பிறந்த பிறவி பயனை அடைய செய்யுறது அந்த தேனியோட வேலை அதனால நான் அது கூட நட்பா இருக்கணும்
ஆனா நீ அத பார்த்து பொறாமை படுறது சரி இல்லைனு சொல்லுச்சு
அத கேட்ட பட்டாம்பூச்சி சொல்லிச்சு அடடா உன்னை பொறாமையால அவமதிச்சிட்டேன் எனக்கு தக்க தண்டனை கொடுன்னு சொல்லுச்சு
அப்பத்தான் பொறாமை குணம் உள்ளவங்களுக்கு வெளியில இருந்து துன்பம் வர தேவையில்லை ,அவுங்களோட பொறாமை குணமே அவுங்களுக்கு தண்டனைதானு திருவள்ளுவர் எழுதியிருக்கிற
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து
அப்படிங்கிற குரலை சொல்லுச்சு ரோஜா
நீதி : பொறாமை எண்ணமே ஒருவருக்கு தண்டனையாக அமையும்