The Quack Toad – நரியும் தேரை டாக்டர் -Aesop Fables in Tamil Font:- காட்டுக்குள்ள இருக்குற எல்லா மிருகங்களுக்கும் அங்க இருக்குற தேரை மருத்துவம் பார்த்துச்சு

அந்த தேரைய பார்க்க எல்லா மிருகங்களும் போச்சு ,ஒவ்வொரு மிருகமும் தங்களுக்கான மருந்த தேரை டாக்டர் கிட்ட இருந்து வாங்கி தங்கள குணப்படுத்திகிடுச்சுங்க

ஒருநாள் ஒரு நரி அந்த தேரை டாக்டர பார்க்க வந்துச்சு , புத்திசாலியான நரிக்கு தேரைய பார்த்ததும் புரிஞ்சிபோச்சு ,தேரைக்கு வைத்தியம் எல்லாம் தெரியாது அது ஒரு ஏமாத்து காரன்னு
உடனே தேரைகிட்ட கேட்டுச்சு தேரை டாக்டரே உடம்பு கருத்து போச்சுன்னா அத குணப்படுத்த மருந்து இருக்கானு

உடனே தேரை டாக்டர் சொல்லுச்சு இருக்கே அத சாப்பிட்டா உடனே உடம்பு வெள்ளையா மாறிடும்னு சொல்லுச்சு
அத கேட்ட நரி திரும்பவும் உடம்பு வளைஞ்சு இருந்தா அத குணப்படுத்த மருந்து இருக்கானு கேட்டுச்சு
ஓஹ் இருக்கேனு சொல்லுச்சு தேரை டாக்டர்

அத கேட்ட நரி சொல்லுச்சு அப்ப அந்த ரெண்டு மருந்தையும் நீ முதல்ல சாப்பிடு அடுத்து மத்தவங்களுக்கு மருந்து கொடுக்கலாம்னு சொல்லுச்சு நரி
இத கேட்ட எல்லா மிருகங்களும் அப்பத்தான் பார்த்துச்சுங்க தேரை கருப்பா உடல் வளைஞ்சு இருக்குறத
அடடா தேரைக்கே வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கு இதுல தேரைகிட்ட மருந்து வாங்க வந்த நாமதான் முட்டாள்னு சொல்லிட்டு எல்லா மிருகங்களும் காட்டுக்கு திரும்பி போயிடுச்சுங்க
நீதி : பிறரைச் சீர்படுத்த விரும்புபவர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்