The Princess And The Salt – இளவரசியும் உப்பும்

The Princess And The Salt – இளவரசியும் உப்பும் :- ஒரு காலத்துல ஒரு மிக பெரிய நாடு இருந்துச்சு

அந்த நாட்ட ஒரு ராஜா அண்டுகிட்டு வந்தாரு ,அவருக்கு மூணு பொண்ணுங்க

அந்த மூணு இளவரசிகளும் ரொம்ப அழகாவும் புத்திசாலியாவும் இருந்தாங்க

ஒருநாள் அவுங்க மூணு பேத்தயும் சோதிச்சு பாக்க நினைச்சாரு ராஜா ,அதனால அவுங்கள கூப்பிட்டு என்ன உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்னு கேட்டாரு ராஜா

உடனே மூத்த இளவரசி சொன்னா எனக்கு தங்கம் எவ்வளவு முக்கயமோ அந்த அளவுக்கு உங்கள எனக்கு பிடிக்கும்னு சொன்னா

ராஜா ரொம்ப சந்தோஷப்பட்டாரு ,அடுத்த இளவரசி கிட்டயும் அதே கேள்வியை கேட்டாரு

அதுக்கு அவுங்க வைரம் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவுக்கு எனக்கு உங்கள பிடிக்கும்னு சொன்னாங்க

அவுங்களோட பதில கேட்ட அரசருக்கு ரொம்ப சந்தோசம் வந்துச்சு ,அடுத்த இளவரசி கிட்டயும் அதே கேள்வியை திரும்ப கேட்டாரு

அதுக்கு அந்த இளவரசி சொன்னாங்க உப்பு கல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு என் வாழ்க்கையில நீங்க முக்கியம்னு சொன்னா

இத கேட்ட அரசருக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு ஒரு உப்பு கல்லோட தகுதியோட என்ன ஒப்பிடுறியான்னு கோபமா கேட்டாரு

ஆனா ரொம்ப புத்திசாலியான இளவரசி அதுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கவே இல்ல ராஜா ரொம்ப கோபத்துல கத்த ஆரம்பிச்சாரு

நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் மிக பெரிய அரசனான என்ன ஒரு உப்பு கல்லோட ஒப்பிட்ட உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல

நீ இனிமே என் அரண்மனைல இருக்க கூடாது இப்பவே வெளியபோனு சொன்னாரு அந்த அரசர்

உடனே ஒரு காவலாளிய கூப்பிட்ட அரசர் இந்த மூணாவது இளவரசிய இந்த அரண்மனைய விட்டு வெளியேத்தி காட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வர சொன்னாரு

ராஜாவோட கோபம் தனியிர வர கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்னு நினச்சா அந்த இளவரசி

அதனால அரசர் சொல் படி காட்டுக்கு போனா அந்த இளவரசி

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா ஒரு குதிரை வர்ற சத்தம் கேட்டுச்சு அவளுக்கு ,அதனால ரொம்ப பயந்து போனா அந்த இளவரசி

அப்பதான் பக்கத்துல ஒரு மர பொந்த பார்த்தா ,உடனே அதுக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டா இளவரசி

கொஞ்ச நேரத்துல குதிரை நிக்கிற சத்தம் கேட்டுச்சு ,அதுல ஒருந்து ஒரு வேடன் இறங்கி வந்தான்

பெண்ணே நான் ஒரு வேட்டை காரன் ,இந்த பகுதியில காட்டு மிருகங்களோட ஆபத்து இருக்கு அதனால என்கூட வா என்னோட வீட்டுல பாதுகாப்பா இருக்கலாம்னு சொன்னான்

உடனே இளவரசி வேட்டைக்காரனோட வீட்டுல போய் தங்க ஆரம்பிச்சா ,இளவரசி கிட்ட இருந்து நடந்த எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டான் அந்த வேட்டைக்காரன்

ஒரு நாள் அந்த காட்டுக்கு வேட்டையாட வந்தாரு அரசர் , வழி தவறி தன்கூட வந்த வேலைகாரங்கள விட்டு ரொம்ப தூரம் வந்துட்டாரு அரசர் ,அப்ப அவருக்கு ரொம்ப பசியும் தாகமும் எடுக்க ஆரம்பிச்சுச்சு ,

அப்பத்தான் வேட்டைக்காரனோட வீட்ட பார்த்தாரு உடனே கதவ தட்டி உதவி கேட்டாரு அரசர் , அவர பார்த்த உடனே யாருனு அடையாளம் கண்டுபிடிச்ச வேட்டைக்காரன் அவர உள்ள வரச்சொல்லி உக்கார சொன்னான்

வீட்டுக்கு பின்னாடி இருந்த இளவரசி கிட்ட போயி அரசர் வைத்திருக்குறத சொன்ன வேட்டைக்காரன் அரசருக்கு உணவு எடுத்துட்டு வர சொன்னான்

உடனே இளவரசி தன் கையாலேயே அரசருக்கு உணவு சமைச்சு ,வேலை காரங்க கிட்ட கொடுத்து அனுப்புனா

பசியில இருந்த அரசர் உடனே அந்த சாப்பிட்ட சாப்பிட ஆரம்பிச்சாரு ,அப்பத்தான் அரசருக்கு தெரிஞ்சது இந்த சாப்பாட்டுல உப்பு இல்லைனு

அப்ப அந்த வேட்டைக்காரன் சொன்னான் அரசே இப்ப ஒரு உப்பு கல்லோட தகுதி என்னனு உங்களுக்கு புரிஞ்சதானு கேட்டான்,

அப்பத்தான் ஒரு மனிதனுக்கு உப்பு எவ்வளவு முக்கியம் , அந்த அளவுக்கு தன்னை நேசிச்ச இளவரசியை வீட்டு விட்டு தொரத்திட்டமேன்னு வருத்தப்பட்டாரு

அப்ப பின்னாடி இருந்து இளவரசி வந்து அரசர பார்த்தா ,உடனே அரசர் ரொம்ப சந்தோஷமாகிட்டாரு

தனக்கு பாடம் கத்து கொடுத்து தன்னோட குடும்பத்த ஒன்னு சேர்த்த வேட்டை காரனுக்கு நன்றி சொல்லி அவனையும் இளவரசியையும் கூட்டிட்டு அரண்மனைக்கு போனாரு அரசர்