The Prince And His Magical Amulet – இளவரசரும் மந்திர மோதிரமும் :- ஒரு ஊருல ஒரு நல்ல இளவரசர் இருந்தாரு
அவருகிட்ட ஒரு மந்திர மோதிரம் இருந்துச்சு அந்த மோதிரத்தை வச்சு எல்லாருக்கும் நல்லது செஞ்சாரு
ஒருநாள் அந்த மந்திர மோதிரம் தொலைஞ்சு போச்சு ,இளவரசர் ரொம்ப கவலை பட்டாரு
அந்த மந்திர மோதிரத்த தேடி காட்டுக்குள்ள நடந்து போய்கிட்டு இருந்தாரு
அப்ப ஒரு ஆந்தை அவர கூப்புட்டுச்சு ,ஏன் சோகமா இருக்கீங்க இளவரசரேனு கேட்டுச்சு
அதுக்கு அந்த இளவரசர் சொன்னாரு நான் அந்த மந்திர மோதிரத்தை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு உதவி செஞ்சு அவுங்கள சந்தோச படுத்திகிட்டு இருந்தேன் ,
இப்ப அந்த மந்திர மோதிரம் தொலைஞ்சு போய்டுச்சு ,அதனால் நாட்டு மக்கள் கேக்குறத எல்லாம் என்னால கொடுக்க முடியலன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு
உடனே அந்த ஆந்தை சொல்லுச்சு நாட்டுமக்கள சந்தோஷப்படுத்த அந்த மந்திர மோதிரத்தை பயன்படுத்தி பணம் பொருள்னு வர வச்சு அத அவுங்களுக்கு கொடுக்குறீங்க
அந்த பணம் பொருள வச்சு அவுங்க தங்களோட பிரச்னைய தீர்த்துக்கிட்டு தைரியத்தோட சந்தோசமா இருக்காங்க
ஆனா அந்த பணமும் பொருளும் கொடுக்குற தைரியத்த நீங்க அந்த மந்திர மோதிரம் இல்லாமலே கொடுக்கலாமே
இதுக்கு எதுக்கு வறுத்த படுறீங்கன்னு கேட்டுச்சு ,அப்பத்தான் இளவரசருக்கு புரிஞ்சது அடடா நாட்டு மக்களுக்கு மந்திர மோதிரம் இல்லாம நிறைய உதவி செய்யலாமே ,அத விட்டுட்டு இப்படி வறுத்த பட்டு நாட்கள கடத்திட்டமேன்னு வருத்தப்பட்டாரு
உடனே அந்த ஆந்தைக்கு நன்றி சொல்லிட்டு , நாட்டு மக்களுக்கு நேரடியா போய் அவுங்க பிரச்னையை தீர்த்து வைக்க ஆரம்பிச்சாரு
சாலையில் அடிபட்டு கிடந்த மான் குட்டிய கைவைத்தியம் செஞ்சு காப்பாத்துனாரு
நாட்டு மக்களை நேரடியா சந்திச்சு ,அவுங்களோட ஒண்ணா சேர்ந்து உணவு உன்ன ஆரம்பிச்சாரு
முதியவர்களுக்கு தேவையான சின்ன சின்ன வேலைகளை கூட செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சாரு இளவரசர்
அதோட இல்லம விலங்குகளையும் பறவைகளையும் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சாரு இளவரசர்
குழந்தைகளை விளையாட கொட்டிட்டு போறது
இப்படி தொடர்ந்து நல்ல விஷயங்கள் செய்ய ஆரம்பிச்ச அவருக்கு ,நாட்டு மக்களிடையே ரொம்ப நல்ல பேரு கிடைச்சுச்சு
ஒருநாள் அரண்மனை தோட்டத்துல நிறய மிருகங்கள் சத்தம் போடுறதை கேட்டாரு , உடனே அந்த போன இளவரசரை யாரோ கூப்பிடற மாதிரி இருந்துச்சு
அங்க இருந்த குளத்துல இருந்துதான் சத்தம் வர்றதை உணர்ந்து ,குளத்துக்குள்ள போய் பார்த்தாரு
அங்க அந்த தங்க மோதிரம் மிதந்துகிட்டு இருந்துச்சு , இளவரசே நான் இல்லாம எப்படி மக்களுக்கு நன்மை செஞ்சீங்கன்னு கேட்டுச்சு
அதுக்கு இளவரசர் தான் செஞ்ச நல்ல காரியங்கள் எல்லாத்தையும் சொன்னாரு, தொடர்ந்து சொன்னாரு இனிமே நீ எனக்கு தேவையில்லை உதவி செய்ய நானே போதும்னு சொன்னாரு
அப்பத்தான் அந்த தங்க மோதிரம் சொல்லுச்சு ,இளவரசே இது கடவுளோட சோதனை ,ஒவ்வொரு இளவரசருக்கு இந்த மாதிரி மந்திர மோதிரத்தை கொடுத்து சோதிப்பாரு கடவுள்
அவுங்க நன்மை செஞ்சா அவுங்களோடவே இருக்கும் மோதிரம் ,இல்லைனா திரும்ப கடவுள்கிட்டயே போய்டும்
ஆனா நீங்க மந்திர மோதிரம் வச்சு செய்ய வேண்டிய எல்லா நல்ல காரியங்களையும் மந்திர மோதிரம் இல்லாமலேயே செய்ய ஆரம்பிச்சுடீங்க
கடவுள் வச்ச சோதனையில் நீங்கதான் முதல் மதிப்பெண் ,இனி மந்திர மோதிரம் இல்லாமலேயே அதோட சக்திகளை பெற முடியும் இது என் மூலமா கடவுள் உங்களுக்கு கொடுக்குற வரம்னு சொல்லிட்டு மறைஞ்சு போய்டுச்சு அந்த மந்திர மோதிரம்
மந்திர சக்தி கிடைச்ச இளவரசர் தொடர்ந்து நன்மைகள் செஞ்சு இந்த உலகத்துலயே பெரிய அரசரா ஆனாரு