The Porridge Witch-Kids Stories – மந்திர பானை :- ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு ஏழ்மையான வீடு இருந்துச்சு

அந்த வீட்டுல ரெண்டு குட்டி பொண்ணுங்க வாழ்ந்துகிட்டு வந்தாங்க,அதுல ஒரு பொண்ணுக்கு ரொம்ப ஞாபக மறதி ,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்ட விஷத்தை கூட மறந்துடுவா

அந்த குட்டி பொண்ணுங்களுக்கு ரொம்ப கஷ்டம் இருந்துச்சு ,அவுங்களுக்கு தினமும் சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு
ஒருநாள் அந்த பொண்ணு காட்டு பகுதிக்கு உணவு தேடி போனா ,அப்படி போகுறப்ப தண்ணிகுடிக்க மட்டும் ஒரு பாட்டில்ல தண்ணி எடுத்துக்கிட்டு போனா

அப்படி போகுறப்ப அவளுக்கு தண்ணி தவிச்சுச்சு ,உடனே அந்த தண்ணி பாட்டில எடுத்து தண்ணி கொடுக்க ஆரம்பிச்சா

அப்ப திடீர்னு ஒரு மாய கிழவி அவ முன்னாடி வந்துச்சு ,உடனே அந்த குட்டி பொண்ணு ரொம்ப பயந்து போனா

ஆனா அந்த மாய கிழவி பயப்படாத பாப்பா ,எனக்கு கொஞ்சம் கொடுக்க தண்ணி கொடுன்னு சொல்லுச்சு ,

இறக்கப்பட்ட அந்த குட்டி பொண்ணு அந்த கிழவிக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுத்தா

அடுத்த நிமிஷம் அந்த கிழவி மறைஞ்சு ஒரு அழகான தேவதை அங்க நின்னுகிட்டு இருந்துச்சு

அந்த பொண்ணோட ஏழ்மை நிலைய புரிஞ்சிகிட்ட அந்த தேவதை ,அவளுக்கு ஒரு மந்திர பானைய கொடுத்துச்சு ,

கொடுத்துட்டு ரெண்டு மந்திரம் சொல்லுச்சு ,நீ ஒரு மந்திரம் சொன்னா நீ என்ன கேட்டாலும் இந்த பானையில இருந்து வரும் ,இன்னோரு மந்திரம் சொன்ன வர்றது நின்னடும்னு சொல்லுச்சு அந்த தேவதை

உடனே ரொம்ப சந்தோஷத்தோட வீட்டுக்கு வந்து தன்னோட தங்கை கிட்ட நடந்தத சொல்லி அந்த பானைய கொடுத்தா

உடனே தங்களுக்கு நிறய சாப்பாடு வேணும்னு சொல்லி ஒரு மந்திரத்த சொன்னா அந்த குட்டி பொண்ணு

உடனே அந்த பானையில் இருந்து நிறய உணவு பொருட்கள் வர ஆரம்பிச்சுச்சு ,உடனே ரெண்டு சகோதரிகளும் நிறய சாப்புட்டாங்க ,உடனே அடுத்த மந்திரத்தை சொல்லி உணவு வர்றத நிப்பாட்ட சொன்னா இன்னொரு பொண்ணு

ஆனா ஞாபக மறதியினால அந்த ரெண்டாவது மந்திரத்தை மறந்துட்டா அந்த பொண்ணு ,அதனால அந்த பானையில இருந்து நிறய உணவு பொருட்கள் வந்துகிட்டே இருந்துச்சு

அப்பதான் அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,ஊருல இருக்குற ஏழை மக்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு அந்த உணவை கொடுக்க ஆரம்பிச்சாங்க

அந்த உணவை சாப்பிட்ட எல்லாரும் அந்த ரெண்டு குழந்தைகளையும் ரொம்ப பாராட்டுனாங்க

அப்பத்தான் அங்க ஒரு தாத்தா வந்தாரு ,அவரு ரொம்ப சோர்ந்து போயி இருந்தாரு ,அவரை பார்க்கவே பாவமா இருந்துச்சு

அவரு வந்த குட்டி பொண்ணுங்ககிட்ட எங்க வீட்டுலயும் நிறய குட்டி பொண்ணுங்க இருக்காங்க ,அவுங்களுக்கு சாப்பிட எதுவுமே இல்லாததால் ரெண்டு நாளா சாப்பிடாம இருக்காங்கனு சொன்னாரு

பசியின் கொடுமை தெரிஞ்ச அந்த ரெண்டு குட்டி பொண்ணுங்களும் அவருக்கு அந்த மந்திர பானையை கொடுத்துட்டு ,அந்த மந்திரத்தையும் சொல்லி கொடுத்தாங்க ,இத வச்சு உங்க குழந்தைகளோட பசிய போக்குங்கனு சொல்லுச்சுங்க அந்த குட்டி பொண்ணுங்க
டக்குனு அந்த தாத்தா மறைஞ்சு அந்த அழகிய தேவதை அங்க வந்து நின்னுச்சு ,அந்த தேவதைய பார்த்ததும் அந்த மறதி பொண்ணுக்கு ரொம்ப சந்தோசமா போச்சு

அப்ப அந்த தேவதை கேட்டுச்சு ,உனக்கு கொடுத்த பானைய எதுக்கு அடுத்தவங்களுக்கு கொடுத்தனு ,அதுங்க அந்த பொண்ணுங்க சொல்லுச்சுங்க ,பசியோட கொடுமை என்னனு எங்களுக்கு தெரியும் ,அது மாதிரி யாரும் பசியிலயும் ஏழ்மையிலேயும் யாரும் வாட கூடாதுன்னுதான் அந்த பானையை கொடுத்தோம்ம்னு சொன்னாங்க

இத கேட்ட அந்த மந்திர தேவதைக்கு ரொம்ப சந்தோசமா போச்சு ,ஏழ்மை நிலையில இருக்குற நீங்களே இப்படி இறக்க குணத்தோட இருக்குறத பார்க்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குனு சொல்லி ,அந்த மந்திர பானையை அந்த ரெண்டு பொண்ணுங்க கிட்டயே கொடுத்துட்டு ,அந்த ரெண்டு மந்திரத்தையும் திரும்பியும் சொல்லிக்கொடுத்துச்சு அந்த தேவதை

அதோட அடிக்கடி மறந்துபோற மறதி நோயையும் குணப்படுத்துச்சு அந்த தேவதை ,அன்னைல இருந்து அந்த பானையை வச்சு அங்க வர்ற எல்லாருக்கும் சாப்பாடு போட்டு நல்லபடியா வாழ்ந்தாங்க அந்த ரெண்டு பொண்ணுங்களும்