The Old Lion – வயதான சிங்கம்

The Old Lion – வயதான சிங்கம் :- ஒரு காட்டு பகுதியில ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த சிங்கத்துக்கு வயசானதால அதனால வேட்டையாட முடியாம மரணமடையிற தருவாயில் இருந்துச்சு

அப்ப அங்க வந்த ஒரு கரடி தன்னோட காலால அந்த சிங்கத்தை எத்துச்சு

அதே நேரத்துல அங்க வந்த கழுத்தையும் அந்த சிங்கத்த தொந்தரவு செஞ்சுச்சு

இத பார்த்த குரங்குக்கு தைரியம் வந்து அந்த சிங்கத்துமேல ஒரு வாழைப்பழத்தை எடுத்து வீசுச்சு

இத எல்லாம் அமைதியா பார்த்துகிட்டு இருந்த சிங்கம் தன்னோட பலத்தை எல்லாம் சேர்த்து கடைசியா ஒரு முறை கர்ஜனை செஞ்சுச்சு

அத கேட்ட எல்லா மிருகங்களுக்கும் பயம் வந்துடுச்சு ,கரடி பக்கத்துல இருக்குற அதுக்குள்ள குதிச்சி ஓடிடுச்சு

கழுத பக்கத்துல இருக்குற புதருக்குள்ள போய் ஒளிஞ்சிகிடுச்சு ,குரங்கு மரத்துமேல போய் பத்திரமா இருந்துகிடுச்சு

நீதி : எதிரியாக இருந்தாலும், பாதுகாப்பற்றவர்களைத் தாக்குவது கோழைத்தனமானது.