The Fox & the Monkey – குரங்கு அரசரும் புத்திசாலி நரியும்

The Fox & the Monkey – குரங்கு அரசரும் புத்திசாலி நரியும் : ஒரு மிகப்பெரிய காட்டு பகுதியில நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

எல்லா மிருகங்களும் ஒண்ணா சேர்ந்து தங்களோட ராஜாவ ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யணும்கிறது அந்த காட்டோட சட்டம்

அப்படி ஒரு நாள் எல்லா மிருகங்களும் சேர்ந்து தங்களோட ராஜாவ தேர்ந்தெடுக்க கூடியிருந்துச்சுங்க

அப்ப ஒரு குரங்கு அங்க வந்து நல்லா டான்ஸ் ஆடி எல்லாரையும் சந்தோசப்படுத்துச்சு ,

உடனே எல்லா மிருகங்களும் குரங்கையே தங்களோட அரசனா தேர்ந்தெடுத்துச்சுங்க

ஆனா அங்க இருந்த ஒரு புத்திசாலி நரிக்கு அது பிடிக்கல

ஒருநாள் காட்டு வழியில நடந்து போன நரி ஒரு கரித்துண்டு மிருகங்களை பிடிக்கிற பொறியில மாட்டி இருந்தத பார்த்துச்சு

உடனே அதுக்கு ஒரு யோசனை வந்துச்சு , உடனே குரங்கு ராஜாகிட்ட போன நரி , அரசே ஒரு சிறந்து விருந்து உங்களுக்காக காத்துட்டு இருக்குனு சொல்லி கூட்டிகிட்டு போச்சு

அந்த கரித்துண்ட பார்த்ததும் கொஞ்சம் கூட யோசிக்காத குரங்கு அதப்போயி எடுத்துச்சு ,உடனே அந்த மிருகங்களை பிடிக்கிற பொறியில சிக்கிக்கிடுச்சு அந்த குரங்கு

அப்பதான் அந்த நரி சொல்லுச்சு ,அறிவு இல்லாதவன் தலைவனானா எல்லாருக்கும் ஆபத்து ,அதனால நீ வேட்டைக்காரங்களோட போ ,நாங்க இன்னொரு காட்டு ராஜாவுக்கான தேர்தலை நடத்திக்கிடுறோம்னு சொல்லுச்சு