ஒட்டுக்கேட்ட ஓநாய் The Mother & the Wolf

ஒட்டுக்கேட்ட ஓநாய் The Mother & the Wolf :- ஒரு கிராமத்துக்கு பக்கத்துல ஒரு அடர்ந்த காடு இருந்துச்சு

அந்த காட்டுல ஒரு முட்டாள் ஓநாய் இருந்துச்சு , ஒரு நாள் இரைதேடி காட்டுக்குள்ள அலைஞ்ச அந்த ஓநாய்க்கு ஒண்ணுமே கிடைக்கல

அதனால் பக்கத்துல இருக்குற கிராமத்துக்குள்ள போயி எதாவது உணவு கிடைக்குமான்னு பார்க்க பாத்துச்சு

அப்பதான் அந்த காட்டு ஓரத்துல ஒரு சின்ன வீடு இருக்குறதையும் ,அதோட ஜன்னல்ல ஒரு அம்மா தன்னோட கைக்குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டுகிட்டு இருக்குறதையும் பார்த்துச்சு

உடனே மெதுவா மறைஞ்சு மறைஞ்சு அந்த ஜன்னல் பக்கதுக்கு போச்சு

அப்ப சாப்பிடாம அடம்பிடிச்சிச்சு அந்த குழந்தை ,உடனே அவுங்க அம்மா சொன்னாங்க நீ சாப்பிடலனா உன்ன ஓநாய்க்கு தூக்கி கொடுத்துடுவேன்னு சொன்னாங்க

இத கேட்ட முட்டாள் ஓநாய் அந்த அம்மா அந்த குழந்தையை தனக்கு கொடுத்துடுவாங்கனு முட்டாள் தனமா நம்புச்சு ,அதனால அன்னைக்கு முழுசும் அங்கேயே காத்துகிட்டு கிடந்துச்சு

சாயந்திரம் ஆனதும் திரும்ப அந்த அம்மா அந்த குழந்தைக்கு ஜன்னல் வழியா வேடிக்க காமிச்சுக்கிட்டே சாப்பாடு ஊட்டுனாங்க

அப்ப அந்த குழந்தை சொல்லுச்சு என்ன ஓநாயிகிட்ட கொடுத்துடுவீங்களானு கேட்டுச்சு ,அதுக்கு அந்த அம்மா சீ சீ அம்மா சும்மா சொன்னேன் என் செல்லத்தை அப்படி எல்லாம் செய்யமாட்டேனு சொன்னாங்க

அப்ப அந்த குழந்தை கேட்டுச்சு ,ஓநாய் இங்க வந்தா என்ன பண்ணுவீங்கனு ,அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க நம்ம அப்பாகிட்ட சொன்னம்னா அவரு வச்சிருக்கு பெரிய ஈட்டிய அதுமேல எறிஞ்சி கொன்னுடுவாருனு சொன்னாங்க

அப்பன்னு பார்த்து இரும்பு வேலை செய்யுற அவுங்க அப்பா ஒரு ஈட்டிய எடுத்துக்கிட்டு அந்த பக்கம் வந்தாரு

அத பார்த்த ஓநாய் ரொம்ப பயந்து போயி தல தெறிக்க காட்டுக்குள்ள ஓடிடுச்சு

சின்ன குழந்தைக்காக சொன்ன பொய்ய உண்மைன்னு நம்பி அங்கேயே காத்துகிடந்த தன்னோட முட்டாள் தனத்தை நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த ஓநாய்

நீதி : நாம் பார்ப்பதை கேட்பதை எல்லாம் நம்ப கூடாது