The Monkeys And The Bell – மணி அடித்த குரங்குகள் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு திருடன் இருந்தான்

அந்த திருடன் எத பார்த்தாலும் திருடிட்டு போயி காட்டுக்கு அடுத்து இருக்குற ஊருல வித்து வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தான்

ஒரு நாள் அவன் கோவில் பக்கம் போனான் ,அப்ப மணி அடிக்கிற சத்தம் கேட்டுச்சு அவனுக்கு உடனே கோவிலுக்கு போனான் அந்த திருடன்

அங்க ஒரு பெரிய மணி தொங்கிகிட்டு இருக்குறத பார்த்தான் ,அடடா இந்த மணிய திருடி வித்தா ஒரு வாரம் நாம திருட போக வேணாம்னு நினைச்ச அந்த திருடன் அந்த மணிய திருடிட்டு காட்டுவழியா அடுத்த ஊருக்கு நடந்து போக ஆரம்பிச்சான்

அவன் நடக்க நடக்க அந்த மணி டிங் டாங்குனு சத்தம் கொடுக்க ஆரம்பிச்சுச்சு,அந்த மணியோட சத்தம் காட்டுக்குள்ள ஒரு தூங்கிட்டிரு இருந்த ஒரு புலியோட தூக்கத்த கெடுத்துச்சு

யாரு மணி அடிச்சு தன்னை எழுப்பிவிட்டானு ரொம்ப கோபத்தோட பார்த்துச்சு அந்த புலி

புலிய பார்த்ததும் அந்த திருடன் ரொம்ப பயந்து போனான் ,அந்த புலி அவன ஒரு அடி அடிச்சது

உடனே அந்த திருடனுக்கு ஒரே ரெத்தமா வந்துச்சு ,இந்த மணிய தூக்கிகிட்டு இந்த புலிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதுனு அந்த மணிய அங்கயே போட்டுட்டு வேகமா ஓட ஆரம்பிச்சான் திருடன்

அந்த புலியும் அவன தொரத்திக்கிட்டே போக ஆரம்பிச்சுச்சு அப்பதான் ஒரு குரங்கு கூட்டம் அந்த பக்கமா வந்துச்சுங்க

அந்த குரங்கு கூட்டம் அந்த மணிய பார்த்ததும் அத எடுத்து அடிச்சி சத்தம் வர வச்சு பாத்துச்சுங்க

அந்த மணி எழுப்புனா டிங் டாங் சத்தம் கேட்டதும் அந்த குரங்குகளுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு

அதனால அதுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து அந்த மணிய எடுத்துக்கிட்டு தாங்க வாழுற பெரிய மரத்துக்கு போச்சுங்க

அந்த மரம் ஊருக்கு பக்கத்துல இருக்குற காட்டு பகுதியில இருந்ததால , ஒவ்வொரு தடவ அந்த மணிய அடிக்கும் போதும் அது ஊர் கரங்களுக்கு கேட்டுச்சு

திடீர்னு காட்டுக்குள்ள இருந்து மணி சத்தம் தொடர்ந்து கேட்டதால ஊர்மக்கள் எல்லாம் ரொம்ப பயந்து போனாங்க

இரவு பகல்னு தொடர்ந்து மணி சத்தம் கேட்டதால, ஊர்மக்கள் அந்த நாட்ட ஆண்ட ராஜாகிட்ட போயி சொன்னாங்க

அந்த ராஜா சொன்னாரு இந்த பிரச்சனைக்கு யார் காரணம்னு கண்டுபிடிச்சி ,அந்த மணி சத்தத்தை நிறுத்துறவங்களுக்கு நிறய பரிசு கொடுக்குறேனு எல்லாருகிட்டயும் சொன்னாரு

இத கேட்ட ஒரு பாட்டி தைரியத்தோட காட்டுக்குள்ள போனாங்க ,அங்க குரங்குகள் மணிய வச்சு விளையாண்டுக்கிட்டு இருந்தத பார்த்தாங்க

அடடா இது இது குரங்குகளோட வேலையானு சொன்ன அந்த பாட்டி ,அந்த மணிய குரங்குங்க கிட்ட இருந்து எப்படி பிடுங்குறதுனு ஒரு திட்டம் போட்டாங்க

உடனே நேரா சந்தைக்கு போயி நிறைய பழங்கள் காய் கறிகள் எல்லாம் வாங்கி ஒரு கூடையில் போட்டு எடுத்துக்கிட்டு திரும்ப அந்த காட்டுக்கு போனாங்க

காட்டுக்கு போன அந்த பாட்டி குரங்குகளுக்கு தெரியிற மாதிரி அந்த கூடைய வச்சிட்டு தூங்குறமாதிரி நடிக்க ஆரம்பிச்சாங்க

அந்த கூடைய பார்த்த குரங்குகள் மெதுவா மரத்துல இருந்து ஒவ்வொண்ணா இறங்கி வந்து பார்த்துச்சுங்க

மெதுவா ஒவ்வொரு குரங்கா அந்த கூடையில் இருந்த பழங்களையும் காய்கறிகளையும் எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சுங்க

அப்ப மணி வச்சிருந்த குரங்கும் மெதுவா கீழ இறங்கி வந்துச்சு , கீழ வந்த அந்த கொரங்கு மணிய கீழ போட்டுட்டு ஒரு பழத்தை எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சு

இத எல்லாம் ஒர காண்ணால பார்த்துகிட்டு இருந்த அந்த பாட்டி டக்குனு அந்த மணிய எடுத்துகிட்டாங்க

மணிய எடுத்த பாட்டி நேரா அரசர்கிட்ட போயி நடந்தது எல்லாம் சொன்னாங்க , தைரியத்தோடவும் புத்திசாலித்தனத்தோடவும் மணிய எடுத்துட்டு வந்து பிரச்னையை தீர்த்த அந்த பாட்டிக்கு நிறய பரிசு கொடுத்தாரு அந்த ராஜா