The Monkey & the Camel – குரங்கு நடனமும் ஒட்டக சூப்பும் :- காட்டு ராஜாவான சிங்கத்துக்கு பிறந்தநாள் கொண்டாடுனாங்க காட்டுமிருகங்கள் எல்லாரும்
அதனால காட்டு மிருகங்கள் எல்லாம் ராஜாவோட குகைக்கு முன்னாடி வந்து விருந்து உண்டு சந்தோசமா இருந்தாங்க
அப்ப குரங்கு ஒன்னு நடனமாட தொடங்குச்சு ,அத பார்த்த எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க
ஆனா ஒட்டகத்துக்கு மட்டும் அந்த குரங்கு மேல ரொம்ப பொறாமையா இருந்துச்சு
உடனே அந்த ஒட்டகமும் நடனமாட தொடங்குச்சு , குச்சி காலோட அந்த ஒட்டகம் ஆடுனது பாக்குறதுக்கு நல்லாவே இல்ல
அதனால் சிங்க ராஜா நடனமாடுனது போதும்னு சொன்னாரு ,ஆனா அந்த ஒட்டகம் தொடர்ந்து நடனமாடிகிட்டே இருந்துச்சு ,
அப்படி ஆடுறப்ப எல்லா மிருகங்களையும் இடிச்சி தள்ளுச்சு ,சில மிருகங்கள மிதிச்சுச்சு ,அப்ப சிங்கத்தோட காலையும் மிதிச்சுச்சு ஒட்டகம்
கொஞ்ச நேரம் கழிச்சி எல்லா மிருகங்களுக்கும் ஒட்டக சூப் பரிமாறுனாங்க
நீதி : தற்பெருமை பொறாமை கொண்டோருக்கு தகுந்தது தோல்வியே ஆகும்