The Little Prince – தனிமை இளவரசர் :- முன்னொரு காலத்துல பூமி மாதிரியே இருக்குற இன்னொரு கிரகத்தில ஒரு குட்டி இளவரசர் வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவர் தனியா இருந்தாலும் எப்பவும் சுறுசுறுப்பா இருப்பாரு,அந்த கிரகத்துல இருக்குற எரிமலை கலை சுத்தம் செய்யிறது அவருக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்

அதனால தினமும் காலையில எந்திரிச்சதும் எரிமலைகளை சரி செஞ்சு சுத்தமா வச்சிக்கிட்டு ஆரம்பிச்சிடுவாரு

ஒருநாள் வானத்துல இருந்து ஒரு விதை ஒன்னு அந்த கிரகத்துல விழுந்துச்சு ,உடனே அந்த இளவரசர் அத புதைச்சு வச்சு தண்ணி ஊத்துனாரு

கொஞ்ச நாள்ல அந்த விதை முளைச்சி அழகான ஒரு மஞ்சள் ரோஜா செடியா மாறுச்சு,அன்னைல இருந்து அந்த ரோஜாவும் அந்த குட்டி இளவரசரும் ரொம்ப நண்பர்களா இருந்தாங்க

ஆனா அந்த குட்டி ரோஜா குட்டி இளவரசர் எப்பவும் தன்கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டுச்சு ,அது இளவரசருக்கு கோபத்தை ஏற்படுத்துச்சு ,எனக்கு நிறய வேலை இருக்கு அத விட்டுட்டு இந்த மஞ்சள் ரோஜாவோடவே இருக்கமுடியுமானு யோசிச்சாறு

அதனால் பக்கத்து கிரகங்களுக்கு போயி நிறய நண்பர்களை தேட முடிவு பண்ணினாரு,தன்னோட நண்பன் தன்னை பிரிஞ்சி போறத நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த மஞ்ச ரோஜா

பக்கத்து கிரகத்துக்கு போன இளவரசர் அங்க ஒரு ராஜாவை பார்த்தாரு ,அவரு கிட்ட நாம் நண்பர்களா இருப்பமானு கேட்டாரு

அதுக்கு அந்த ராஜாவும் சரினு சொன்னாரு ,

ஆனா அந்த மஞ்சள் ரோஜாச்செடி மாதிரி குட்டி இளவரசரை நேசிக்காம அவரோட வேலைகளை மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தாரு அந்த அரசர் ,

அதனால அவர தொந்தரவு செய்ய வேணாம்னு அடுத்த கிரகத்துக்கு கிளம்பி போனாரு அந்த குட்டி இளவரசர்

அங்க ஒரு நல்ல ட்ரெஸ் பண்ணுன ஒருத்தர் இருந்தாரு ,அவருகிட்ட நாம நண்பர்களா இருக்கலாமான்னு கேட்டாரு அதுக்கு அவரும் சரினு சொன்னாரு

ஆனா அவரும் தன்னுடைய வேலைகளை பார்குறதுலேயே குறியா இருந்தாரே தவிர குட்டி இளவரசர் கிட்ட நேரத்தை செலவிடவே இல்ல அதனால அடுத்த கிரகத்துக்கு கிளம்பி போனாரு குட்டி இளவரசர்

அந்த கிரகத்துல ஒரு ஆராய்ச்சியாளர் இருந்தாரு ,அவருகிட்ட நாம நண்பர்களா இருக்கலாமான்னு அந்த குட்டி இளவரசர் கேட்டாரு ,அதுக்கு அவரும் சரினு சொன்னாரு

ஆனா அந்த ஆராய்ச்சியாளர் தொடர்ந்து தன்னோட ஆராய்ச்சி புத்தகங்களை படிச்சிகிட்டே இருந்தாரு ,அதனால அடுத்த கிரகத்துக்கு போனாரு குட்டி இளவரசர்

அங்க ஒரு புத்திசாலி நரி இருந்துச்சு ,அந்த நரி குட்டி இளவரசரை பார்த்ததும் அவரோட கதையை கேட்டுச்சு

உடனே குட்டி இளவரசர் மஞ்சள் ரோஜாவ பத்தியும் அதோட தொந்தரவு பத்தியும் ,தான் நண்பர்கள் தேடி அலைஞ்சு கதையையும் சொன்னாரு
நரி சிரிச்சிகிட்டே சொல்லுச்சு , நீ நண்பர்கள் தேடி போய் நண்பர்கள் கிடைச்சும் அவுங்க உங்கூட நேரம் செலவிடலானு தெரிஞ்சதும் ஒவ்வொரு கிரகத்துல இருந்தும் திரும்ப வந்துட்ட ,அந்த மஞ்சள் ரோஜாவும் நீயும் இப்ப ஒண்ணுதான் உனக்காக யாரும் நேரத்தை செலவிட விரும்பல அதே மாதிரித்தான் நீயும் உன்ன நண்பனா நினச்சா மஞ்சள் ரோஜாவுக்கு நேரம் செலவிடலனு சொல்லுச்சு
அப்பத்தான் குட்டி இளவரசருக்கு புரிஞ்சது தான் முதல்ல நண்பர்களுக்கு நேரத்தை செலவிடாம ,அடுத்தவங்க மட்டும் தன்கூட நேரத்தை செலவிடனும்னு நினைச்சது ரொம்ப தப்புனு புரிஞ்சிக்கிட்டாரு

அதனால் தான் வாழ்ந்த கிரகத்துக்கே போயி தன்னை நேசிச்ச குட்டி மஞ்சள் ரோஜாவோட திரும்பவும் நட்பா இருந்தாரு