The Little Christmas Tree Kids Story – குட்டி கிறிஸ்துமஸ் மரம் :- அது ஒரு கிறிஸ்துமஸ் நேரம் ,காட்டுல ஒரு குட்டி கிறிஸ்துமஸ் மரம் இருந்துச்சு

அது ரொம்ப குட்டியா இருந்துச்சு ,அதனால அதுக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு

நான் இந்த வருஷமும் சரியா வளர்த்ததால ,எந்த வீட்டுலயும் கிறிஸ்துமஸ்க்கு என்ன வாங்கிட்டு போயி அலங்காரம் பண்ண மாட்டாங்கன்னு புலம்ப ஆரம்பிச்சுச்சு

அத கேட்ட மத்த கிறிஸ்துமஸ் மரங்கள் எல்லாம் அதெல்லாம் நீ நல்லா தான் வளர்ந்திருக்க , உன்னோட அளவு வேணும்னு கேக்குற குடும்பத்துக்கு கொடுக்குறதுக்காக யாராவது உன்ன கண்டிப்பா வாங்கிட்டு போவாங்க கவலைப்படாம இருன்னு சொல்லுச்சுங்க

ஆனா அதோட புலம்பல் நிக்கவே இல்ல ,எப்ப பாத்தாலும் புலம்புர பழக்கம் அதிகமாகிட்டே இருந்துச்சே தவிர கொறஞ்ச பாடு இல்ல

அப்படி ஒருநாள் அந்த குட்டி கிறிஸ்த்துமஸ் மரம் பொலம்பிகிட்டு இருக்கும்போது ,ஒரு விறகு வெட்டி அங்க வந்தாரு,அவரு அந்த இருக்குற எல்லா பெரிய கிறிஸ்துமஸ் மரங்களையும் வெட்டி வண்டியில ஏத்த ஆரம்பிச்சாரு

அடடா இந்த வருசமும் இந்த விறகுவெட்டி பெரிய கிறிஸ்துமஸ் மரங்களை மட்டுமே வெட்டுறாரேன்னு வருத்தப்பட்டு பார்த்துகிட்டே இருந்துச்சு

அப்பதான் இந்த குட்டி கிறிஸ்துமஸ் மரத்தை பார்த்த அந்த விறகுவெட்டி நேரா அந்த குட்டி கிறிஸ்துமஸ் கிட்ட வந்து அந்த மரத்தையும் வெட்டி வண்டியில ஏத்துனாரு

ஒரு வழியா கிறிஸ்த்துமஸ் விழாவுல பங்குஎடுத்துக்க போறோம்னு நிம்மதி அடையாத அந்த குட்டி கிறிஸ்த்துமஸ் மரம் ,என்ன கொண்டு போய் கடையில வச்சா மட்டும் குட்டியா இருக்குற என்ன யார் வாங்கி கொண்டுபோய் கிறிஸ்துமஸ் கொண்டாடுற இடத்துல வைப்பாங்கனு அடுத்த புலம்பலை ஆரம்பிச்சுச்சு

கிறிஸ்துமஸ் மரம் வாங்க வந்த எல்லாரும் அழகா உயரமா இருந்த மரங்களை எல்லாம் தொடர்ந்து வாங்க ஆரம்பிச்சாங்க ,இத எல்லாம் பார்த்த அந்த குட்டி கிறிஸ்துமஸ் மரத்துக்கு ரொம்ப வருத்தமா போச்சு

அப்படி ஒரு நாள் அந்த குட்டி மரம் வருத்தப்பட்டு பொலம்பிகிட்டு இருக்கும்போது ,ஒரு குட்டி பையன் அங்க வந்தான் அவன் அந்த குட்டி மரத்தை பார்த்து எனக்கு இந்த குட்டி மரம்தான் வேணும்னு கேட்டான்

நாமதான் ஏற்கனவே பெரிய கிறிஸ்துமஸ் மரம் வாங்கிட்டமேன்னு சொன்னாங்க,இருந்தாலும் அந்த குட்டி பையன் அடம்பிடிக்க ஆரம்பிச்சான் ,அதனால் அவனுங்க அம்மா இந்த குட்டி கிறிஸ்துமஸ் மரத்தையும் சேர்த்து வாங்கிட்டு போனாங்க

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு எல்லாரும் சேர்ந்து அந்த பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிச்சாங்க ,ஆனா அந்த குட்டி மரத்தை யாருமே கண்டுக்கிடல

அப்பத்தான் குட்டி குட்டி பிள்ளைகள் எல்லாம் அங்க வந்துச்சுங்க ,அதுங்களோட உயரத்துக்கு ஏத்தா மாதிரி இந்த குட்டி கிறிஸ்துமஸ் இருந்ததால அதுங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு ,அந்த குட்டி பிள்ளைகள் எல்லாரோட உயரத்துக்கு ஏத்தா மாதிரி அந்த மரம் இருந்ததால எல்லா குட்டி பிள்ளைகளும் சேர்த்து அந்த மரத்தை அலங்காரம் பண்ண ஆரம்பிச்சுச்சுங்க

குட்டி பிள்ளைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து அலங்காரம் பண்ணுனதால அந்த குட்டி கிறிஸ்துமஸ் மரம் ரொம்ப அழகான கிறிஸ்துமஸ் மரமா எல்லாராலயும் பாராட்ட பட்டுச்சு , அத பார்த்த எல்லா பெரியவர்களும் குழந்தைகள் அலங்காரம் செஞ்ச இந்த மரம் ரொம்ப அழகா இருக்குனு சொல்ல ஆரம்பிச்சாங்க
இத்தனை நாள் தொடர்ந்து பொலம்பிகிட்டு இருந்த அந்த கிறிஸ்த்துமஸ் மரம் இப்பதான் சிரிக்க ஆரம்பிச்சுச்சு ,அப்பதான் அதுக்கு புரிஞ்சிச்சு குழந்தைகள் உயரத்துக்கு எட்டுற மாதிரி என்ன படைச்ச கடவுளோட யோசனைய இத்தன நாள் தவறா புரிஞ்சிகிட்டாமேனு வருத்தப்பட்டுச்சு