The Lion’s Share – சிங்கத்தின் பங்கு -Aesop Fables in Tamil

The Lion’s Share – சிங்கத்தின் பங்கு -Aesop Fables in Tamil:- ஒரு வறட்சியான கால கட்டத்துல காட்டுல ஒரே பஞ்சம்

அதனால நிறய மிருகங்களுக்கு வேட்டையாடி சாப்பிட உணவு எதுவும் கிடைக்கவே இல்ல

அதனால காட்டு மிருகங்கள் ரொம்பநாள் பசியோடவே இருந்துச்சுங்க

அதனால ஒரு சிங்கமும் ஒரு நரியும் ஒரு ஓநாயும் சேர்ந்து வேட்டையாடலாம்னு முடிவு செஞ்சுச்சுங்க

அதன்படி ஓநாய் ஒரு கழுதைய தொரத்திக்கிட்டு வந்துச்சு , நரி அந்த கழுதைய தப்பிக்க விடாம மறச்சி நின்னுச்சு

நடுவுல இருந்த சிங்கம் ஒரே அடி அடிச்சு அந்த கழுதைய கொன்னுடுச்சு

ரொம்ப நாளைக்கு அப்புறம் வேட்டையாடி நல்ல உணவு கிடைக்க போற சந்தோஷத்துல மூணு மிருகங்களும் சாப்பிட உக்காந்துச்சுங்க

ஓநாய் அந்த கழுதைய பிச்சு போட்டுச்சு ,நரி அத மூணு பங்கா பிரிச்சிச்சு

உடனே அந்த சிங்கம் முதல் பாகத்தை எடுத்து நான் இந்த காட்டுக்கே ராஜா எனக்கு அதனால இந்த பகுதி ராஜாங்கத்துக்குனு சொல்லி தின்னுடுச்சு

அடுத்ததா இருந்த பகுதிய எடுத்து நான் இங்க இருக்குற எல்லா மிருகங்களை விடவும் பலசாலி அதனால இந்த பகுதியும் எனக்கும் என்னோட வீரத்துக்கும்னு சொல்லி அதையும் சாப்பிட்டுச்சு

மூணாவதா இருந்த பகுதிய சாப்பிட போன சிங்கத்த பார்த்து ஓநாய் கேட்டுச்சு கூட்டு முயற்சியா வேட்டையாடுன கழுதைய நீங்க மட்டும் சாப்பிடுறீங்களேன்னு கேட்டுச்சு

உடனே கோபமான சிங்கம் அந்த ஓநாய ஒரே அடி அடிச்சிடுச்சு ,அத பார்த்துகிட்டு இருந்த நரி கிட்ட நீங்க எதுவும் எங்கிட்ட கேக்கணுமான்னு கேட்டுச்சு

அதுக்கு அந்த நரி சொல்லுச்சு நிலைமைய புரிச்சிகிட்டு அமைதியா இருக்குறது ஒரு புத்திசாலித்தனமான விஷயம் அது என்கிட்ட இருக்குறதால தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்

அத புரிச்சிக்கத ஓநாய் அடிபட்டு கிடக்குனு சொல்லுச்சு ,இத கேட்ட சிங்கம் இந்த நரி தன்னோட புத்திசாலித்தனத்தால தனக்கு ஆபத்து ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும்னு நினைச்சி அந்த மூணாவது பங்க நரிக்கே கொடுத்துடுச்சு