The Jungle Book Story in Tamil- ஜங்கிள் புக் கதை

The Jungle Book Story in Tamil- ஜங்கிள் புக் கதை – ஒரு காட்டுக்குள்ள மௌக்லினு ஒரு குட்டி பையன் இருந்தான்.

மௌக்லி விளையாடுதல்

அவன ஒரு ஓநாய் கூட்டம் வளத்துக்கிட்டு வந்துச்சு

மௌக்லி ஓநாய் கூட்டத்துடன் இருத்தல்

அந்த ஓநாய் கூட்டத்தோட தாய் ராஷா அங்க பையன தன்னோட குழந்தை போலவே வளத்துக்கிட்டு வந்துச்சு,அதோட குட்டிகளும் அவன்கூடவே இருக்கும்.

மௌக்லி தாய் ராசா ஓநாய் கூட இருத்தல்

மௌக்லிய பகீரானு ஒரு கருந்சிறுத்தை தான் முதல் முதலா ஒரு தீ விபத்துல இருந்து காப்பாத்தி, ராஷா ஓநாய் கிட்ட வளர்க்க சொல்லி கொடுத்துச்சு.

பகீரா காப்பதுதல்

அந்த காட்டுக்கு பக்கத்துல மனிதர்கள் வாழும் ஒரு கிராமம் இருந்துச்சு ,அங்க ஒருநாள் பெரிய தீ விபத்து நடந்துச்சு,

அப்ப அங்க இருந்த மக்கள் எல்லாரும் தீய அணைச்சிகிட்டு இருக்கிறப்ப இந்த குழந்தையை காப்பாத்துச்சு பகீரா

மனிதர்கள் தீயை அணைத்தல்

அந்த குழந்தையோட குடும்பத்த கண்டுபிடிக்க போன பகீரா,பாதுகாப்பா இருக்க மனிதர்கள் வேலி போட்டு பாதைய அடைச்சத கவனிச்சுச்சு ,இருந்தாலும் அந்த குழந்தையோட அப்பாவ கண்டுபிடிக்க முயற்சி பண்ணிகிட்டே இருந்துச்சு

பகீரா மௌக்லியை ஓநாய்களிடம் ஒப்படைத்தல்

அந்த குழந்தைக்கு மௌக்லினு பேர் வச்சு அதுக்கு எல்லா வித வித்தையையும் கத்து கொடுக்க ஆரம்பிச்சுச்சு பகீராவும் அதோட நண்பன் பாலு கரடியும்

பகீரா மௌக்லி பயிற்சி செய்தல்

வேகமா ஓடுறது ,மரத்துமேல ஏறுறதுனு எல்லா வித்தையையும் அவனுக்கு சொல்லி கொடுத்து மத்த மிருகங்க கிட்ட இருந்து அவன பாதுகாத்துச்சு பாலு கரடி

மௌக்லி மரம் ஏறுதல்

பகீரா தொடர்ந்து அந்த கிராமத்தை கண்காணிச்சி கிட்டே இருந்துச்சு ,ஆனா காட்டு மிருகங்கள் கிட்ட இருந்து தங்கள பாதுகாக்க அவுங்க வேலி போட்டதால அதனால மௌக்லியோட அப்பாவ கண்டுபிடிக்கவே முடியல.

பகீரா வேலியை பார்த்தல்

அவனுக்கு தொடர்ந்து நீச்சல் ,மீன் பிடிக்கிறது ,பாறை மேல ஏறுறதுனு எல்லாத்தையும் சொல்லி கொடுத்துச்சு பாலு கரடி

பாலு கரடி

அப்படி ஒருநாள் அவுங்க மீன் பிடிச்சிட்டு வீட்டுக்கு திரும்புற நேரத்துல

பாலு கரடி  மீன் பிடித்தல்

புதர்ல இருந்து ஒரு உருவம் அவுங்கள பாத்துச்சு

ஷேர்கான் புலி

அது ஷேர்கான்ட்ர பொல்லாத புலி ,அத பார்த்ததும் மௌக்லியும் பாலுவும் ரொம்ப பயந்து போனாங்க

ஷேர்கான் புலி  மௌக்லி பாலுவை பார்த்தால்

அப்ப அங்க வந்த பகீரா அந்த புலி கூட சண்டை போட்டு அவுங்கள காப்பாத்துச்சு

ஷேர்கான் புலி  பகீரா சண்டை

அதுக்குள்ள ஓநாய் கூட்டம் வந்து மௌக்லிய பத்திரமா கூட்டிட்டு போனாங்க

மௌக்லி ஓநாய்களுடன்

அப்பத்தான் மௌக்லி சொன்னான் ,இந்த புலிய நான் ஏற்கனவே சின்ன பிள்ளையா இருக்கிறப்ப பார்த்திருக்கேன்

ஷேர்கான் புலி  அப்பாவை தாக்குதல்

அதுதான் எங்க அப்பாவ தாக்குச்சு ,என்னையும் தூக்கிட்டு போச்சு ,அப்ப ஏற்பட்ட தீ விபத்துலதான் பகீரா என்ன கண்டுபிடிச்சி கூப்பிட்டு வந்தாருனு சொன்னான்

மற்ற விலங்குகள் தாக்குதல்

உடனே எல்லா மிருகங்களும் சேர்ந்து இனிமே மௌக்லி இங்க இருந்தா ஆபத்து ,அதனால மனிதர்கள் வாழும் கிராமத்துல கொண்டுபோய் விட்டுடுவோம்னு சொல்லுச்சுங்க

பாலு ,பகீரா ,மௌக்லி ,மலை ஏறுதல்

ஆனா மனிதர்கள் வேலி போட்டதால ஷேர்கான் புலி வாழுற மலை வழியா கிராமத்துக்கு போக முடிவு பண்ணுனாங்க

காட்டு மாடுகள் தூரத்தில்

அப்ப திடீர்னு ஷேர்கான் புலி அவுங்கள பார்த்திடுச்சு ,உடனே பகீரா அங்க இருந்த காட்டு மாடுங்கள எல்லாம் ஷேர்கான் பக்கம் தொரத்தி விட்டுச்சு

காட்டு மாடுகள் புலியை தொரத்துதல்

மாடுகள் தொரத்த வேகமா ஓடுன ஷேர்கான் மலை இடுக்குல மாட்டிகிட்டு தொங்குச்சு

ஷேர்கான் மலையில்

உடனே ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து புலி மேல தூக்கி போட்டான் மௌக்லி .

மௌக்லி வீரம்

அடி பட்ட அந்த ஷேர்கான் புலி கீழ விழுந்திடுச்சு ,

ஜங்கிள் புக் நிறைவு

அதுக்கு அப்புறமா அந்த பையன் காட்டுலயே வாழ ஆரம்பிச்சான் ,எல்லா மிருகங்களும் அவனோட சேர்ந்து ரொம்ப சந்தோசமா இருந்துச்சுங்க