The Hen’s Eggs – சேவல் முட்டை அக்பர் பீர்பால் வேடிக்கை கதைகள்

The Hen’s Eggs – சேவல் முட்டை அக்பர் பீர்பால் வேடிக்கை கதைகள்:-அக்பருக்கும் பீர்பாலுக்கும் நடுவுல எப்போதும் வெடிக்கயான விளையாட்டுகள் நடந்துக்கிட்டே இருக்கும்

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கிண்டல் செஞ்சுகிறதும் நடக்கும்

அதுமாதிரி ஒருநாள் அக்பருக்கு பீர்பால கிண்டல் செய்ய ஒரு யோசனை கிடைச்சது

அரசவியில இருந்த எல்லார் கிட்டயும் ஒரு கோழி முட்டைய கொடுத்து யாருக்கும் தெரியாம ஒளிச்சி வச்சுக்கிட சொன்னாரு அக்பர்

உடனே எல்லாரும் தங்களோட ,உடை ,தொப்பினு அந்த கோழி முட்டைய ஒளிச்சி வச்சாங்க

அரசவைக்கு பீர்பால் வந்ததும் அக்பர் சொன்னாரு எனக்கு ஒரு கனவு வந்துச்சு இங்க இருக்குற மந்திரிகள் எல்லாரும் அரண்மனை குளத்துல குதிச்சி தேடுனா எல்லாருக்கும் கோழி முட்டை கிடைக்கும்

யாருக்கு முட்டை கிடைக்கலையே அவனுங்க இந்த அரண்மனைல இருக்க தகுதி இல்லாதவங்கனு சொன்னாரு

உடனே எல்லா மந்திரிகளும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தண்ணில குதிச்சாங்க ,ஒவ்வொருத்தரா கைல கோழி முட்டையோட வெளியில வந்தாங்க

கடைசியா பீர்பால் குதிச்சி தேடுனா ,அவருக்கு கோழி முட்டை கிடைக்கவே இல்ல உடனே இது அக்பரோட வேலைனு புரிஞ்சிக்கிட்டாரு

உடனே இத சமாளிக்க ஒரு யோசனை வந்துச்சு பீர்பாலுக்கு

உடனே வெளியில வந்த பீர்பால் சேவல் மாதிரி கத்திகிட்டே அக்பர்க்கிட்ட வந்தாரு

ஓஹ் கோழி வெளியில வந்துடுச்சா .அப்ப முட்டை எங்கன்னு கேட்டாரு ,அதுக்கு பீர்பால் சொன்னாரு கோழிகள் தான முட்ட போடும் ,நான்தான் சேவலாச்சேனு சொல்லிட்டு சேவல் மாதிரி கத்தி கிட்டே குதிச்சாரு

இன்னைக்கும் நீங்கதான் ஜெயிச்சீங்க பீர்பால்னு சொல்லிட்டு ,தன்னோட தோல்விய ஒத்துக்கிட்டாரு அக்பர்