The Greater Glutton – Akbar Birbal Story – அக்பரும் மாம்பழமும்:-ஒருநாள் அக்பருக்கு ஒரு விவசாயி ஒரு கூட நிறய மாம்பழம் பரிசா கொடுத்து அனுப்புச்சாறு

உடனே அக்பரும் ,மகாராணியும் அரண்மனை தோட்டத்துல உக்காந்து மாம்பழம் சாப்டுகிட்டு இருந்தாங்க
அக்பர் மகாராணிய சீண்டி பார்க்க அசைபட்டாரு ,உடனே தான் சாப்பிட்ட மாம்பழ தொட கொட்டையையும் மகாராணி காலுக்கு அடியில போட்டாரு

அந்த நேரம் வந்த பீர்பால் கிட்ட ,பீர்பால் அவர்களே இங்க பாத்தீங்களா வர வர மகாராணி தீனி பண்டாரமா மாறிகிட்டு வாராங்க ,கணவனான எனக்கு கூட மாம்பழம் கொடுக்காம எல்லாத்தையும் அவுங்களே தின்னுகிட்டு இருக்காங்கனு சொல்லி

மகாராணியோட காலடியில இருக்குற மாம்பழ கொட்டைகள காமிச்சாரு ,மகாராணிக்கு சங்கடமா போச்சு

இத கவனிச்ச பீர்பால் ,அரசே மகாராணி கூட மாம்பழத்த தின்னுட்டு கொட்டைய கீழ போடுறாங்க ,ஆனா நீங்க கோட்டையோட முழுங்குறீங்க போல அதான் உங்க காலடியில ஒண்ணுமே இல்லைனு சொன்னாரு
வாய் விட்டு சிரிச்ச அக்பரும் ,மகாராணியும் பீர்பால ரொம்ப பாராட்டுனாங்க