The Frog And The Mouse Animal Story in Tamil – தவளை எலி நண்பர்கள் கதை :- ஒரு கிராமத்துல ஒரு சுட்டி எலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு காட்டுல ஒரு தவளையும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு,அதுங்க ரெண்டும் ரொம்ப நட்போட இருந்துச்சுங்க

தினமும் காலைலயே எலியோட இருப்பிடத்துக்கு தவளை வந்திடும்

அந்த எலி வலைல ரெண்டு நண்பர்களும் ரொம்ப சந்தோசமா விளாடுவாங்க

எலி தான் சேகரிச்சு வச்சிருந்த தின்பண்டங்கள தவளைக்கு கொடுக்கும் ,தவளையும் அந்த ருசியான சாப்பாட்டை நல்லா சாப்பிடும்

சாயந்திரம் ஆனதும் தவளை தன்னோட இடத்துக்கு போய்டும்

இப்படி ஒரு நல்ல நண்பன் கிடைச்சதுல எலிக்கு ரொம்ப சந்தோசம்

ஒருநாள் தவளைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தினமும் நாமதான் எலியோட இடத்துக்கு போறோம் இன்னைக்கு எலிய நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்து விருந்து வைப்போம்னு நினச்சுச்சு தவளை

உடனே காலைலயே எலி கிட்ட போயி தன்னோட இடத்துக்கு விருந்துக்கு கூப்பிட்டுச்சு தவளை

அதுக்கு எலி சொல்லுச்சு ,தவளையரே நீங்க ஒரு காட்டு வாசி ,நீங்க காட்டுக்குள்ள சுலபமா நடக்க முடியும் ,ஆனா என்னால வெளியில ரொம்ப நேரம் நடக்க முடியாதுனு சொல்லுச்சு

உடனே தவளை ஒரு யோசனை சொல்லுச்சு அதுபடி ஒரு பெரிய கயிற எடுத்து தன்னோட கால்ல கட்டிகிடுச்சு தவளை

அதோட இன்னொரு முனைய எலியோட கால்ல கட்டி , இப்ப நான் வேகமா காட்டுக்கு போறேன் நீங்களும் என்கூட வாங்கனு சொல்லிட்டு குதிச்சி குதிச்சு ஓட ஆரம்பிச்சது தவளை

கொஞ்ச நேரத்துல தன்னோட சேர்த்து எலிய கட்டி இருந்தத சுத்தமா மறந்திடுச்சு முட்டாள் தவளை

அப்ப அங்க ஒரு குளம் இருந்துச்சு ,எலி யோட சேந்து குளத்துல குதிச்சிடுச்சு தவளை,தண்ணியில விளுந்த எலி மூச்சு விட முடியாம மயங்கி போச்சு எலி

செத்த எலி மெதுவா தண்ணியில மிதக்க ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் ஒரு கழுகு வானத்துல இருந்து அந்த எலிய பார்த்துச்சு

வேகமா பறந்துவந்து அந்த எலிய அப்படியே தூக்கிட்டு போச்சு அந்த கழுகு

அப்ப அதோட சேர்த்து கட்டியிருந்த தவளையும் சேர்ந்து வெளியில வந்துச்சு ,கழுகு அந்த முட்டாள் தவளையயும் முட்டாள் தவளைய நம்புன முட்டாள் எலியையும் கொத்தி திண்ணுடுச்சு
அதனால குழந்தைகளா யார் என்ன சொன்னாலும் அது பாதுகாப்பா இருக்குமான்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிச்சு எந்த காரியத்தையும் செய்யுங்க