The Foolish Sage Tamil Moral Story- முட்டாள் சாமியார் :- ஒரு ஊருல ஒரு சாமியார் இருந்தாரு ,அவரு ரொம்ப பணத்தாசை பிடிச்சவரா இருந்தாரு

ஊருல இருக்குறவங்க ,அவரை பாக்க வர்றவங்க கொடுக்குற பொருள் எல்லாத்தையும் அவரே வச்சுப்பாரு

அதனால் அவருகிட்ட நிறய பணம் சேர்ந்துக்கிட்டே போச்சு ,ஆனா அத அவரு யாருகிட்டயும் கொடுக்கவே மாட்டாரு

எல்லா பணத்தையும் ஒரு பையில போட்டு அவரே தோளுல மாட்டிகிட்டே சுத்துவாரு

ஒருநாள் ஒரு கிராமத்துக்கு உபதேசம் செய்ய போயிருந்தாரு அவரு,அப்ப ஒரு திருடன் அந்த பைய கவனிச்சான்

இந்த சாமியார் நிறய காசு வச்சிருக்காரு ,அவருகிட்ட எப்படியாவது சிஷ்யனா சேர்ந்து அந்த பையோட எல்லாத்தையும் திருடனும்னு முடிவு பண்ணுனான் அவன்

சாமியார் கிட்ட போன அவன் ஐயா எனக்கு நிற சொத்து பணம் எல்லாம் இருக்கு அதனால எனக்கு பணத்து மேல இருக்குற ஆசையே போய்டுச்சு என்ன உங்க சிஷ்யனா சேர்த்துக்கோங்கன்னு சொன்னான்

பணத்தாசை பிடிச்ச அந்த சாமியாருக்கு ஒரே சந்தோசம் ,பணத்து மேல ஆசைப்படாத இவன நம்ம வச்சுக்கிட்டா நம்ம பணத்துக்கு எந்த ஆபத்தும் வராது ,இவன்கிட்ட இருக்குற பணத்தையும் நாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிடலாம்னு திட்டம் போட்டு அவனை சிஷ்யனா சேர்த்துக்கிட்டாரு

கொஞ்சம் கொஞ்சமா சாமியாரோட இருந்து நல்ல பேர் எடுத்த அந்த திருடன் அந்த பண பைய எப்படியாவது திருடனும்னு சந்தர்ப்பம் பார்த்துகிட்டே இருந்தான்

ஒரு நாள் அந்த திருடன் ரொம்ப அசந்து தூங்குறத பார்த்தாரு அந்த சாமியார்,அவனை எழுப்பி எப்படி நீ இப்படி சந்தோசமா தூங்குற எனக்கு தூக்கமே வரமாட்டுதுனு சொன்னாரு சாமியார்
அதுக்கு அந்த திருடன் சொன்னான் ஐயா உங்க கிட்ட வர்றதுக்கு முன்னாடி இன்னொரு சாமியார் கிட்ட மந்திரம் ஒன்னு கத்துக்கிட்டேன் அதநாள எனக்கு சுலபமா எல்லாத்தையும் மறந்துட்டு தூங்க முடியுதுனு சொன்னான்

அதுக்கு அந்த சாமியார் அந்த மந்திரத்தை தனக்கும் சொல்லி கொடுக்க சொல்லி கேட்டாரு
உடனே அந்த திருடன சாமியார கூப்பிட்டுக்கிட்டு காட்டு வழியா நடந்து போனான் ,அப்ப அங்க ஒரு பெரிய மரத்தடி இருந்துச்சு

அப்ப அந்த திருடன் சொன்னான் உங்களுக்கு எதுமேலே ரொம்ப விருப்பமோ ,எது உங்களுக்கு அதிகமா வேணும்னு நினைக்கிறீர்களோ ,எது உங்ககிட்டயே இருக்கணும்னு நினைக்குறீங்களோ அத இந்த மரத்தடியில வச்சுட்டு அஞ்சு தடவ இந்த மரத்த சுத்தி வாங்கனு சொன்னான் அவன்

உடனே அந்த பைய ஒரு மரத்தடியில வச்சுட்டு அந்த திருடனை அத பார்த்துகிட சொல்லிட்டு மரத்தை சுத்தி நடக்க ஆரம்பிச்சாரு சாமியார்
அவர் அந்த பக்கமா போனதும் இதுதான் சந்தர்ப்பம்னு அந்த பைய தூக்கிட்டு ஓட ஆரம்பிச்சான் திருடன்

இத பார்த்த சாமியாருக்கு ஒண்ணுமே புரியல நீ எனக்கு மந்திரம் சொல்லி தரேன்னு சொன்னியே இப்ப ஏன் என் பணத்தை எடுத்துட்டு ஓடுறன்னு சத்தமா கேட்டாரு

அதுவா உங்களுக்கு ஏன் தூக்கம் வரலைனா நீங்க இந்த பணத்து மேல ரொம்ப ஆச வச்சிருக்கீங்க,அத பாதுகாக்கணும்னு நினச்சு நெனச்சே உங்களுக்கு தூக்கம் வரல

இனிமேலாவது பணத்து மேல ஆச வைக்காம இருந்து பாருங்க ,உங்களுக்கு நல்ல நிம்மதி கிடைக்கும்னு சொல்லிட்டு ஓடி போய்ட்டான் அந்த திருடன்

திரும்ப வீட்டுக்கு வந்த சாமியார் தான் ஏமாத்த பட்டத நினச்சு ரொம்ப வருத்தப்பட்டார் , இருந்தாலும் தன்கிட்ட இழக்க ஒன்னும் இல்லைனு நினைக்கும்போது அவருக்கு ஒரு பெரிய மன நிம்மதி கிடைச்சது

அதனால அன்னைக்கு நல்லா தூங்கி எழுந்தாரு சாமியார்