The Farmer & the Cranes – விவசாயியும் கொக்குகளும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல இருக்குற நிலத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவரு ஒருநாள் தன்னோட நிலத்துல விதைகளை விதைச்சிகிட்டு இருந்தாரு

அத அந்த குளத்துல இருக்குற கொக்குங்க பார்த்துச்சுங்க
அவரு விதை விதைச்சுட்டு ஓய்வெடுக்க ஆரம்பிச்சதும் மண்ண நொண்டி அந்த விதைகளை திங்க ஆரம்பிச்சுச்சுங்க அந்த கொக்குங்க
அத பார்த்த விவசாயி தன்னோட கவட்டைய எடுத்து அந்த கொக்கிகள அடிக்க போனாரு

இறக்க குணம் உடைய அந்த விவசாயி தன்னோட கவட்டையில கல்லு வச்சு அடிச்சா கொக்கு செத்து போயிடுமேனு இறக்கப்பட்டாரு
அதனால வெறும் கவட்டையை வச்சு கொக்குகளை விரட்ட ஆரம்பிச்சாரு
ஆனா அந்த கொக்குகள் கவட்டையில இருந்து கல்லு வராததை தெரிஞ்சிக்கிட்டு

தொடர்ந்து விதைகளை திங்க ஆரம்பிச்சுச்சுங்க ,பொறுமை இழந்த விவசாயி கவட்டையில கல்ல வச்சு அடிச்சாரு
அந்த கல்லு பட்டு நிறைய கொக்குங்க செத்துப்போச்சுங்க
அப்பத்தான் அந்த முட்டாள் கொக்குகளுக்கு புரிஞ்சது இரக்கம் எல்லாம் ஒரு அளவுக்குதான்னு
நீதி : கடமைக்கு முன்பு இரக்கம் செல்லாது