THE FAITHFUL MONGOOSE – பாம்பு கீரி கதை :- ஒரு பெரிய காட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு

அங்க ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரோட வீட்டுல ஒரு கீரி வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ஒரு நாய் குட்டி மாதிரி வீட்ட பாதுகாக்கிறது ,சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்யுறதுனு அந்த வீட்டுல இருக்கவங்களுக்கு உதவியா இருந்துச்சு அந்த கீரி

அந்த விவசாயிக்கு ஒரு குட்டி குழந்தை இருந்துச்சு , அந்த கீரி அந்த குழந்தைய ரொம்ப அக்கறையோட பாத்துக்கிட்டதால அந்த கீரிய ரொம்ப நம்புனாரு அந்த விவசாயி

அதனால் அந்த குழந்தை தொட்டில்ல தூங்கும்போது கூட கீரிய காவலுக்கு விட்டுட்டு மத்த வேலைய செய்ய போய்டுவாங்க விவசாயியும் அவரோட மனைவியும்

அந்த கீரியும் ரொம்ப சமத்தா குழந்தைய பார்த்துகிற வேலைய பார்த்துகிட்டே வந்துச்சு

ஒரு நாள் இதே மாதிரி குழந்தைய பார்த்துகிட்டு சொல்லிட்டு கடைக்கு போனாங்க அந்த விவசாயியும் அவரோட மனைவியும்

அப்ப அங்க ஒரு பாம்பு வந்துச்சு ,அது நேரா தொட்டில்ல தூங்கிட்டு இருந்த குழந்தை பக்கம் வந்துச்சு

அத பார்த்த கீரி ஒரே பாய்ச்சலா பாஞ்சு போயி அந்த பாம்பு கூட சண்ட போட்டு அந்த பாம்ப கொன்னுடுச்சு

அந்த பாம்போட ரெத்தம் வீடு முழுசும் சிந்துனது மட்டுமில்லாம ,கீரியோட வாய் உடம்பு எல்லாத்துலயும் பட்டுடுச்சு

அப்பத்தான் கடைக்கு போன விவசாயியும் அவரோட மனைவியும் திரும்பி வந்தாங்க

வீடே ரெத்தம்மாவும் கீரியோட வாயிலையும் ரெத்தம் இருக்குறத பார்த்த விவசாயியோட மனைவி ,கீரி தன்னோட குழந்தைக்கு ஏதோ ஆபத்து ஏற்படுத்திடுச்சுனு நினைச்சாங்க ,அதனால அவுங்களுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு

அதனால பக்கத்துல இருந்த குச்சிய எடுத்துக்கு கீரிய நல்லா அடி அடின்னு அடிச்சு போட்டுட்டாங்க

அப்பத்தான் அந்த விவசாயி கவனிச்சாறு ,குழந்தை பத்திரமாவும் ,அதோட தொட்டிலுக்கு கீழ ஒரு பாம்பு செத்து கிடக்குறதையும் பார்த்தாரு

அடடா இந்த கீரி குழந்தைய பாதுகாக்க வீட்டுக்குள்ள வந்த பாம்பை தான் கொன்னுருக்கு , இது தெரியாம அவசரப்பட்டு அந்த கீரிய அடிச்சு கொன்னுட்டமேன்னு நெனச்சு வருத்தப்பட்டாங்க அந்த விவசாயியும் அவரோட மனைவியும்