The Cock & the Fox -சேவலும் நரியும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு சேவல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த சேவல் ஒருநாள் சாயந்திரம் தன்னோட சாப்பாட சாப்பிட்டுட்டு மரத்து மேல ஏறி தூங்க போச்சு
அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு , மரத்து மேல இருக்குற சேவல பார்த்த அந்த நரி அடடா இந்த சேவல் எவ்வளவு பெருசா இருக்கு இத அடிச்சி தின்னம்ம்னா எப்படி இருக்கும்னு யோசிச்சுச்சு
ஆனா அந்த சேவல் மரத்து மேல இருக்கே எப்படி அத கீழ வர வைக்குறதுனு யோசிச்சுச்சு அந்த நரி
அப்பத்தான் அதுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,உடனே சேவலை பார்த்து சொல்லுச்சு ,ஏய் சேவலே உனக்கு ஒரு நல்ல சேதி தெரியுமானு கேட்டுச்சு
மரத்துமேல இருந்த அந்த சேவல் கீழ வராம என்ன நல்ல சேதின்னு கேட்டுச்சு
அதுக்கு அந்த நரி சொல்லுச்சு இந்த காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் பறவைகளும் சமாதானமா போயிடுச்சுங்க ,இனிமே யார் யாரையும் அடிச்சி திங்க போறது இல்லைனு சொல்லுச்சு
அத கேட்ட சேவலுக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்துச்சு ,இத ஏன் இப்ப வந்து இந்த நரி தங்கிட்ட சொல்லுதுனு யோசிச்சுச்சு ,இருந்தாலும் நரி கிட்ட பாதுகாப்பா இருக்க முடிவு பண்ணுச்சு
தொடர்ந்து பேசுன நரி காட்டு மிருகங்கள் எல்லாமே நல்ல சேதி கேட்டு நட்பா மாறிடுச்சுகின ,நீயும் கீழ இறங்கி வா நாமளும் நண்பர்களா மாறி அந்த நல்ல சேதிய கொண்டாடலாம்னு சொல்லுச்சு
நரியோட தந்திரத்தை பத்தி தெரிஞ்சி வச்சிருந்த அந்த புத்தி சாலி சேவல் ,அப்படியா ரொம்ப நல்லது நரியாரே அங்க பாருங்க வேட்டை நாய்கள் கூட்டமா வருது ,வாங்க அதுங்களுக்கும் நல்ல சேதியை சொல்லி நண்பர்களா ஆக்கிக்கிடலாம்னு சொல்லுச்சு
என்னது வேட்டை நாய்கள் இந்த பக்கம் வருதான்னு பயந்த நரி அங்க இருந்த ஓட ஆரம்பிச்சுச்சு
அப்ப அந்த சேவல் கேட்டுச்சு ஏன் நல்ல சேது தெரிஞ்ச நீங்க நண்பர்களை பார்த்து ஓடுறீங்கன்னு கேட்டுச்சு
அதுக்கு தன்னோட தந்திரத்துல தோத்த நரி சொல்லுச்சு , அதாவது அந்த வேட்டை நாய்களுக்கு நல்ல சேதி தெரியாம கூட இருக்கலாம் ,அதுங்க என்ன பார்த்ததும் முதல்ல என்ன பிடிச்சி கொன்னுடுங்க அதனால தான் ஓடுறேனு சொல்லுச்சு
நரியோட தந்திரத்தை தன்னோட தந்திரத்தால ஜெயிச்ச சேவல் அந்த மரத்து மேலயே படுத்து தூங்க ஆரம்பிச்சுச்சு
நீதி :தந்திரக்காரன் எளிதில் ஏமாற்றப்படுகிறான்
நீதி : வல்லவனுக்கு வல்லவன் எப்போதும் உண்டு