The Bull & the Goat – ஆடுகளும் ஓடி வந்த பசுமாடும்-Aesop’s Fables :- ஒரு காட்டுல ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சு
அந்த சிங்கம் காட்டு மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வாழ்ந்து வந்துச்சு
ஒருநாள் அந்த சிங்கம் ஒரு பசுமாட்டபார்த்துச்சு ,உடனே அத வேட்டையாட வேகமா ஓடி வந்துச்சு
சிங்கத்த பார்த்த பசுமாடு வேகமா ஓடி தப்பிக்க பார்த்துச்சு ,அப்பத்தான் மனிதர்கள் வாழும் குகை ஒன்னு அது கண்ணுல பட்டுச்சு
உடனே வேகமா ஓடி போயி அந்த குகைக்குள்ள ஒளிஞ்சிகிடுச்சு ,அந்த குகைகுள்ள நிறய மனிதர்களும் நிறய ஆட்டு குட்டிகளும் இருந்துச்சு
புதுசா குகைக்குள்ள வந்த பசுமாட்ட பார்த்ததும் ஒரு ஆட்டு கெடா அந்த பசுமாட்ட விரட்ட பார்த்துச்சு
ஓடி வந்து பசுமாட்ட முட்டி வெளிய போன்னு சொல்லுச்சு ,ஆனா சிங்கம் வெளியில இருக்குறதால பசு அமைதியா இருந்துச்சு
ஆனா ஆடு தொடர்ந்து பசு மாட்டுக்கு தொந்தரவு கொடுத்துச்சு ,அப்பத்தான் அந்த பசு மாடு சொல்லுச்சு ,நான் அடைக்கலம் தேடி வந்ததால உனக்கு நான் சின்னவானா தெரியுரனா
கொஞ்சம் பொறு வெளிய இருக்குற சிங்கம் போகட்டும் ,என்னோட பலத்தை நான் காட்டுறேன்னு சொல்லுச்சு
நீதி :பிறர் துன்பத்தை சாதகமாக்கிக் கொள்வது தீய செயல்