The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்:- முன்னொரு காலத்துல ஒரு மிக பெரிய நாடு இருந்துச்சு ,அந்த நாட்ட ஒரு அரசர் ஆண்டுகிட்டு வந்தாரு

அவருக்கு ஒரு புத்திசாலியான இளவரசர் இருந்தாரு ,அவரு ரொம்ப புத்திசாலி,எப்பவும் புத்தகங்களை படிச்சுக்கிட்டு தன்னோட அறிவை வளர்த்துகிறதுலயே நேரத்தை செலவிடுவாரு

ஆனா அவருக்கு ஒரு மன வருத்தம் இருந்துச்சு ,இவ்வளவு புத்திசாலியான எனக்கு நிம்மதி இல்ல ,இந்த நாட்ட அடுத்த ஆளுறதுக்கு தகுதி வந்துடுச்சாணும் தெரியலைனு எப்ப பாத்தாலும் குழப்பிக்கிட்டே இருப்பாரு

ஒருநாள் தோட்டத்துல நடந்து போறப்ப ஒரு தங்க பூவ பார்த்தாரு ,இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பூவ பார்த்ததே இல்லையேன்னு,தோட்டக்காரனை கூப்பிட்டு இது என்ன பூ னு கேட்டாரு

இது தங்க மந்திர பூ எனக்கு மன நிம்மதி வேணும்னா இந்த பூ கிட்ட கேப்பேன் எனக்கு மன நிம்மதி கிடைக்கும்னு சொன்னான் அந்த தோட்டக்காரன்

உடனே டக்குனு அந்த பூவ பிடுங்குனாரு இளவரசர் , இது என்ன முட்டாள் தனம்னு சொல்லி தோட்டக்காரனை அனுப்பிச்சுட்டாரு ,இருந்தாலும் தனக்கு வேண்டியது இந்த பூ கொடுக்குமான்னு ஒரு சந்தேகம் வந்துச்சு இளவரசருக்கு

உடனே எனக்கு ஒரு உதவி வேணும் மந்திர பூவேனு கேட்டாரு ,அடுத்த நிமிஷம் ஒரு மின்னல் வெட்டுச்சு ,இளவரசர் ஒரு மந்திர உலகத்துக்குள்ள போய்ட்டாரு

அப்ப ஒரு மாய தேவதை அவர் முன்னாடி வந்து நின்னுச்சு ,இளவரசே உங்களுக்கு என்ன உதவி வேணும்னு கேட்டாரு

எனக்கு மன நிம்மதியே கிடைக்கல அதனால நான் இன்னும் பெரிய புத்திசாலியா மாறணும்னு கேட்டாரு ,

அதுக்கு அந்த தேவதை சொல்லுச்சு நீ இப்ப இருக்குறதைவிட பெரிய புத்திசாலியா மாற உனக்கு வரம் தர்றேன் ,ஆனா மன நிம்மதி புத்திசாலியா ஆனா மட்டும் வராது ,நீ எப்ப உலகத்த புரிஞ்சிகிட்டு நடக்க ஆரம்பிக்குரியோ அப்பத்தான் உனக்கு மன நிம்மதி கிடைக்கும்னு சொல்லிட்டு அவர திரும்ப அரண்மனை தோட்டத்துலயே விட்டுடுச்சு

இப்ப இளவரசர் தனக்கு புது ஞானம் கிடைசத உணர்ந்தார் ,முன்னாடிவிட இப்ப அறிவு நல்லா வேலை செய்யுறதயும் உணர்ந்தாரு ,அப்பத்தான் தோட்டத்துக்கு பக்கத்துல நிறய குட்டி பிள்ளைகள் விளையாண்டுக்கிட்டு இருக்குறத பார்த்தாரு

அந்த பிள்ளைகள் தங்களோட அறிவை பத்தி கவலை படாம , ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சு சின்ன சின்ன புதிர்களுக்கு விடை கண்டுபிடிச்சு விளையாண்டாங்க
உடனே இளவரசர் கேட்டாரு உங்களுக்கு அறிவு கம்மியா இருக்கு அதனாலதான் உங்களால அடுத்தவங்க உதவி இல்லாம புதிர் விளையாட்ட உங்களால விளையாட முடியலன்னு சொன்னாரு
அதுக்கு அந்த குட்டி பிள்ளைகள் சொல்லுச்சுங்க ,அறிவு இருந்தா நாங்க தனியா விளையாடலாம் ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சு ,ஒருத்தரோட ஒருத்தர் அறிவை பகிர்ந்துக்கிட்டு ,மெதுவாவும் சீராவும் புத்திய வளர்க்குறதுல எங்களுக்கு சோர்வே அடையருது இல்ல ,எந்த கவலையும் இல்லாம எங்க அறிவு வளருதுனு சொல்லுச்சுங்க

குட்டி பிள்ளைகளோடு இந்த யுக்தி இளவரசர ரொம்ப யோசிக்க வச்சுச்சு ,அதி புத்திசாலியான நான் தினமும் அறிவை வளர்த்துகிறது பதிலா , மற்றவங்களோட பழகுறதுனால கூட அதிக புத்திசாலியா மாறலாம் ,இனிமே புத்திசாலியா மாறணும்னு அதிகமா நேரத்தை செலவிடாம ,இது மாதிரி மக்களோட மக்களா கலந்து காலத்தோட சேர்ந்து தன்னோட வளர்ச்சி இருக்கணும்னு நினைச்சாரு
இந்த புது மாற்றத்தை பார்த்த அரசர் ,தன்னோட மகன் இப்ப புத்திசாலி மட்டும் இல்லை புத்திய சரியான வழியில செயல்படுத்துற அறிவாளின்னு உணர்ந்தாரு ,அதனால் இளவரசரை அரசனா அறிவிச்சாரு

உடனே அந்த புது அரசர் தனக்கு நேரம் கிடைக்குறப்ப எல்லாம் ,தனக்கு அறிவு புகட்டுன சின்ன குழந்தைகளோட நேரத்தை செலவிட ஆரம்பிச்சாரு