உண்மை எப்போதும் வெல்லும்- Tamil Moral Story For Kids

உண்மை எப்போதும் வெல்லும்- Tamil Moral Story For Kids:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற தோட்டத்துல ஒரு விவசாயி விவசாயம் செஞ்சுகிட்டு வந்தாரு

அவரோட தோட்டத்துல விளையிற பயிர்கள் எல்லாத்தையும் அந்த காட்டுக்குள்ள இருக்குற முயல் ,நரி மற்றும் ஓநாய் அடிக்கடி சேதப்படுத்தி வந்துச்சுங்க .

தன்னோட தோட்டத்த பாதுகாக்க நினைச்ச விவசாயி அந்த மூணையும் பிடிக்க பொறி வச்சாரு

மறுநாள் காலைல தோட்டத்துக்கு வந்த விவசாயி அந்த பொறியில முயல் ,நரி ஓநாய் மூணும் மாட்டியிருக்குறத பாத்தாரு.

உடனே ஏன் என்னோட தோட்டத்த நாசம் பன்றிங்கன்னு கேட்டாரு ,அதுக்கு முயல் சொல்லுச்சு எனக்கு பசிக்கு உங்க தொட்டது முள்ளங்கி தேவபட்டுச்சு அதுக்காகத்தான் உங்க தோட்டத்துக்கு வந்தேன்னு சொல்லுச்சு

அடுத்து நரி இந்த தோட்டத்துல நிறைய தண்ணி வசதி இல்லைல அதான் தரைய தோண்டி உங்களுக்கு தண்ணி வசதி செஞ்சு தரலாம்னு மண்ண தொண்டுனேனு சொல்லுச்சு

ஒநாய்சொல்லுச்சு இந்த தோட்டத்துல நிறைய தங்கம் மறைஞ்சு இருக்கு அத தோண்டி உங்களுக்கு கொடுக்கதான் இங்க வந்தேன்னு சொல்லுச்சு

உண்மை என்னானு தெரிச்சிருந்த விவசாயி முயல மட்டும் அவுத்து விட்டுட்டு ,பொய் சொன்ன நரியையும் ,ஓநாயையும் கட்டய எடுத்து நல்லா அடி அடின்னு அடிச்சு விட்டுட்டாரு