RUDOLPH THE RED NOSED REINDEER – ருடால்ப் கலைமான் கதை :- ஒரு காலத்துல ருடால்ப்னு ஒரு குட்டி கலைமான் இருந்துச்சு

அந்த கலைமானுக்கு சிகப்பு கலர்ல அழகான மூக்கு இருந்துச்சு ,அத பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு ,ஆனா அந்த கலைமான் ரொம்ப குட்டியா இருந்துச்சு

அத பார்த்த மத்த கலைமான்கள் எல்லாம் அத கிண்டல் செஞ்சுக்கிட்டே இருக்கும் ,அதனால அந்த ருடால்ப் கலைமானுக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை வந்திடுச்சு

அதனால அது கூட்டமான இடங்களுக்கு வர்றதுக்கே ரொம்ப பயப்பட்டுச்சு ,தன்னால யாருக்கும் பிரயோஜனம் இல்ல தன்னால எதுவுமே உருப்படியா செய்ய முடியாதுனு தனக்கு தானே முடிவு செஞ்சுக்கிடுச்சு

அதனால் இரவு பகல்னு எந்த நேரமும் தனிமையிலேயே இருக்க ஆரம்பிச்சுச்சு ,அப்படி ஒரு பனி பொழியும் இரவுல நிலவ பார்த்துகிட்டு இருந்துச்சு ருடால்ப்

அப்ப அங்க கிரிஷ்மஸ் தாத்தாவோட வாகனத்தை பார்த்துச்சு ருடால்ப் ,உடனே வேகமா அவருகிட்ட போன ருடால்ப் என்னால யாருக்குமே உதவ முடியல என்ன உங்களுக்கு உதவி செய்ய அனுமதிப்பீங்களானு கேட்டுச்சு ,
அதுக்கு கிரிஷ்மஸ் தாத்தா சொன்னாரு எனக்கு உதவி செய்ய நினச்சா உன்ன நான் பாராட்டுரென் ஆனா நீ ரொம்ப சின்னதா இருக்க அதனால் அடுத்த முறை உன்னோட உதவிய ஏத்துக்கிடுறேனு சொன்னாரு

ஆனா கொஞ்ச நேரத்துலயே பனி ரொம்ப கொட்ட ஆரம்பிச்சுடுச்சு , கிறிஸ்த்மஸ் தாத்தாவுக்கு என்ன செய்யுறதுனே தெரியல அதனால ருடால்ப் கலைமானை தனக்கு உதவும்படி கேட்டுக்கிட்டாரு

அப்பதான் ருடால்ப் கலைமான் சொல்லுச்சு ,நான் ஏற்கனவே சின்னதா இருக்கேன் என்னால உங்களுக்கு உதவ முடியுமான்னு கேட்டுச்சு

உதவி செய்யணும்னு நினச்ச உன்னோட குறிக்கோள் மட்டுமே எனக்கு முக்கியம் , எவ்வளவு சின்னதா இருந்தாலும் உன்னால செயற்கரிய செயல்களை செய்ய முடியும் அதனாலதான் என்னவோ கடவுள் உன்ன சிகப்பு மூக்கோட சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கிறமாதிரி படைச்சிருக்காருனு சொன்னாரு

உடனே அந்த குட்டி கலைமான தன்னோட வாகனத்துல முன்னாடி கட்டி தன்னோட பயணத்துக்கு பயன்படுத்திக்கிட்டாரு

கிறிஸ்துமஸ் தாத்தா எல்லா குழந்தைகளுக்கு பரிசு கொடுக்க அந்த வாகனத்துல ஏறி ஓவ்வொரு வீட்டுக்கா போனாரு ,இந்த நல்ல செயலுக்கு உதவுனதால கலைமானுக்கு ரொம்ப சந்தோசம் வந்துச்சு

அன்னைல இருந்து அதோட தாழ்வு மனப்பான்மை சுத்தமா போய்டுச்சு