தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story :-ஒரு ஏரிக்கு பக்கத்துல இருக்குற குட்டைல தவளையும் சுண்டெலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க,அதுங்க ரெண்டும் ரொம்ப நல்ல நண்பர்களா இருந்துச்சுங்க
ஒரு கோடை காலத்துல அந்த குட்டைல இருக்குற தண்ணீர் வத்தி போச்சு ,உடனே அந்த சுண்டெலி பக்கத்துல வேற குட்டை இருக்கானு தேடிப்பாத்துச்சு.
கொஞ்ச தூரத்துக்கு அப்பால ஒரு குட்டைய கண்டுபிடிச்சது எலி ,தன்னோட நண்பனான தவளைய கூட்டிகிட்டு அந்த குட்டைக்கு போச்சு அந்த எலி
குட்டைக்கு போன ரெண்டு நண்பர்களுக்கும் திடீர்னு ஒரு சண்ட வந்துச்சு ,யார் இந்த குட்டைக்கு ராஜான்னு ரெண்டுபேருக்கும் போட்டி வந்துச்சு.
இந்த குட்டைய கண்டுபிடிச்சது நான்தான் அதனால நான்தான் இந்த குட்டைக்கு ராஜான்னு சொல்லுச்சு எலி
அதுக்கு தவளை சொல்லுச்சு நீ வேணா இந்த குட்டைய கண்டுபிடிச்சிருக்கலாம் ,ஆனா குட்டைக்குள்ள வாழுற நான்தான் இதுக்கு இனி ராஜா ,குட்டை பக்கத்துல வாழுற நீ ராஜா கிடையாதுன்னு சொல்லுச்சு தவளை
இத கேட்ட எலிக்கு கோபமா வந்துச்சு அது வேகமா ஓடி போயி தன்னோட இனத்தவர்கள எல்லாம் கூட்டிட்டிக்கு வந்துச்சு
தவளையும் தன்னோட கூட இருக்கவங்கள சண்டைக்கு கூட்டிட்டு வந்துச்சு,தவளைகளும் எலிகளும் கூட்டமா சண்டைபோட ஆரம்பிச்சதுங்க
அதுல நிறைய எலிகளும் நிறய தவளைகளும் செத்துப்போச்சு ,இத மரத்துமேல இருந்து பாத்த பருந்துக்கூட்டம் ,வேகமா வந்து செத்துப்போன எலிகளையும் தவளைகளயும் திங்க ஆரம்பிச்சதுங்க
அடடா எலி கறியும் தவளை கறியும் ரொம்ப நல்லா இருக்கேனு உயிரோட இருக்குற தவளைகளையும் எலிகளையும் பிடிச்சி திங்க ஆரம்பிச்சதுங்க.
கடைசியா எல்லா எலிகளும் ,எல்லா தவளைகளும் காரணமே இல்லாம செத்துப்போச்சுங்க
தேவை இல்லாம சண்ட போட்டு தங்களுக்குள்ள பிரச்னையை அடுத்தருக்கு கொண்டுபோன தவளையும் எலியும் சேந்து செத்துப்போச்சுங்க.
Simple and Nice…………
This story was good!!!!!!!