சிங்கமும் முயலும்-பேராசை பெருநஷ்டம் – Small Kids Story

சிங்கமும் முயலும்-பேராசை பெருநஷ்டம் – Small Kids Story:-ஒருநாள் சிங்க ராஜாவுக்கு ரொம்ப பசிச்சது ,அதனால காட்டு வழியில உணவு தேடி அலைஞ்சது அந்த சிங்கம்.

அப்படி போறப்ப ஒரு முயல் தூக்கிகிட்டு இருக்குறத பாத்துச்சு அந்த சிங்கம் .உடனே முயல பிடிக்க மெதுவா அதுகிட்ட போச்சு சிங்கம்

அப்பத்தான் ஒரு மான் அந்த பக்கமா மேஞ்சுக்கிட்டு இருக்குறத பாத்துச்சு அந்த சிங்கம்

உடனே அதோட மனசு மாறிடுச்சு ,என்னதான் ஒருந்தாலும் முயல விட மான் ரொம்ப பெருசு ,மான வேட்டையாடுனா ஒரு வாரம் சாப்பிடலாம்னு அதுக்கு ஒரு எண்ணம் வந்துச்சு

உடனே தன்னோட பாதைய மாத்திக்கிட்டு மான தொரத்த ஆரம்பிச்சது அந்த சிங்கம்

சிங்கத்த பாத்த மான் துள்ளி குதிச்சு காட்டுக்குள்ள ஓடிடுச்சு.அந்த சத்தத்த கேட்ட முயலும் தனுக்கு வந்த ஆபத்த உணர்து தன்னோட வளைக்குள்ள ஓடிப்போச்சு.

பேராசை பெருநஷ்டம்ங்கிற பழமொழிக்கு ஏற்ப தனக்கு கிடைக்க வேண்டிய சின்ன உணவும் பறிபோனத நினச்சு வருத்தப்பட்டுச்சு அந்த சிங்கம்

1 thought on “சிங்கமும் முயலும்-பேராசை பெருநஷ்டம் – Small Kids Story”

Comments are closed.