Mulla’s Wife and the Stew – முல்லாவின் குண்டு மனைவி :- உலக புகழ் பெற்றவரா முல்லா இருந்தாலும் ,அவரோட மனைவி குண்டா இருக்குறத எல்லாரும் சொல்லிகிட்டே இருந்தாங்க

அதனால ரொம்ப வருத்தப்பட்ட முல்லா ஆரோக்கியமா இருக்கணும்னா நீ கொஞ்ச நாள் டயட்ல இருக்கணும்னு சொல்லி நிறய சப்படுறதுக்கு கட்டுப்பாடு விதிச்சாரு முல்லா

நிறய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு இருந்த முல்லாவோட மனைவிக்கு இந்த கட்டுப்பாடு பிடிக்கல ,அதனால முல்லாவுக்கு தெரியாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க,முல்லா எவ்வளவு சொல்லியும் அவரோட மனைவியோட உடம்ப குறைக்கவே முடியல

முல்லா ஒரு நாள் நிறய தின்பண்டம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாரு ,அப்பதான் அவருக்கு ஞாபகம் வந்துச்சு அடடா நம்ம பொண்டாட்டி டயட்ல இருக்காளே இப்ப இந்த தின்பண்டங்கள் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு போனா நிறய சாப்பிட்டு இன்னும் குண்டா மாறிட போறான்னு நினைச்சாரு

வீட்டுக்கு வந்த முல்லா பின் வழியா உள்ள வந்து அவரோட மனைவிக்கு தெரியாம பரண் மேல ஒளிச்சு வச்சாரு தான் வாங்கிட்டு வந்த தின்பண்டங்கள் எல்லாத்தையும் ,ராத்திரி நல்லா தூக்கிகிட்டு இருந்த முல்லா என்னமோ சத்தம் கேட்டு எழுந்திரிச்சி பார்த்தாரு ,அவரோட மனைவி திருட்டு தனமா அந்த பலகாரங்கள் எல்லாத்தையும் எடுத்து வச்சி தின்னு கிட்டு இருந்தாங்க ,

அத பார்த்த முல்லாவுக்கு கோபம் வந்தாலும் சிரிப்புதான் வந்துச்சு , அவுங்கள ரெண்டு திட்டு திட்டிட்டு படுத்து தூங்கிட்டாரு ,மறுநாள் அவரோட நண்பர் அந்த ஊருக்கு வர்றதா லெட்டர் போட்டு இருந்தாரு ,அத பார்த்த முல்லா அவரோட மனைவிக்கு சொன்னாரு என்னோட நண்பர் நல்லா கோழி கறி சாப்பிடுவாரு ,நான் போயி வாங்கிட்டு வாரேன் நீ எனக்கு நல்லா சமைச்சு கொடுன்னு சொல்லிட்டு ,சந்தைக்கு போனாரு முல்லா

சந்தைக்கு போன முல்லா ரெண்டு கிலோ கோழி கறி வாங்கிட்டு வந்து அவரோட மனைவிக்கு கொடுத்தாரு ,கொடுத்துட்டு நீ டயட்ல இருக்க அதனால இந்த ரெண்டு கிலோ கறிய சமைக்க மட்டும் செய் ,நீயே எல்லாத்தையும் சாப்பிட்டிராதனு சொன்னாரு

இத கேட்டுட்டு சமைக்க ஆரம்பிச்சாங்க முல்லாவோட மனைவி , கோழிய நல்லா சமைச்ச அவுங்களுக்கு வாய் ஊருச்சு , ஒரே ஒரு சின்ன பொரிச்ச கோழி துண்டை மட்டும் சாப்பிட்டு பார்க்கலாம்னு நினைச்சாங்க ,முல்லா திட்டுவாருனு நினைச்ச அவுங்களால வாய கட்டுப்படுத்தவே முடியல கொஞ்சமா பொரிச்ச கோழிய எடுத்து திங்க ஆரம்பிச்சாங்க

கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் கொஞ்சம் கோழி தின்னா என்னனு தோணுச்சு ,உடனே இன்னும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டாங்க ,இப்படியே கொஞ்சம் கொஞ்சம்னு சொல்லி இருந்த ரெண்டு கிலோ பொரிச்ச கோழியையும் தின்னு முடிச்சிட்டாங்க.

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வீட்டுக்கு வந்த முல்லா கோழி பொரிச்சு வச்சிருந்த சட்டில வெறும் மசால் மட்டும் இருக்குறத பார்த்தாரு ,உடனே என்ன நடந்து இருக்கும்னு யூகிக்க முல்லா ,அவரோட மனைவிய கூப்பிட்டு பொரிச்ச கோழி எங்க போச்சுன்னு கேட்டாரு

அதுக்கு முல்லாவோட மனைவி சொன்னாங்க ,முல்லா நம்ம வளர்க்கிற பூன வர வர ரொம்ப செட்ட செய்யுது ,அது பொரிச்ச கோழி எல்லாத்தையும் எடுத்து தின்னுடுச்சுனு சொன்னாங்க ,இத கேட்ட முல்லாவுக்கு புரிஞ்சிபோச்சு தன்னோட மனைவி பொய்ச்சொல்றாங்கனு ,உடனே அங்க வந்த பூனையை பிடிச்சு தேராசுல வச்சு அளந்து பார்த்தாரு

பூன மொத்தமே முக்கா கிலோதான் இருந்துச்சு ,இங்க பாரு பூன ரெண்டு கிலோ பொரிச்ச கோழியை தின்னுச்சுனா இந்நேரம் இந்த பூன ரெண்டு கிலோவுக்கு மேல இருக்கனும்லன்னு கேட்டாரு ,முல்லா தன்னோட திருட்டு தனத்தை கண்டு பிடிச்சிட்டாருனு தெரிஞ்சு அசட்டு தனமா சிரிச்சாங்க முல்லாவோட மனைவி ,

அதுக்கு அப்புறம் உடம்ப குறைக்க சொல்லி எந்த கட்டுப்பாடும் முல்லாவோட மனைவிக்கு விதிக்கல ,அவரோட உடம்ப அவுங்களே பார்த்துக்கட்டும்னு விட்டுட்டாரு
