Mulla’s Clothesline – ஓசி ஜிப்பா முல்லா கதை

Mulla’s Clothesline – ஓசி ஜிப்பா முல்லா கதை :-முல்லாவுக்கு எல்லாருக்கும் உதவி செய்யணும்ன்ற மனசு இருந்துச்சு ஆனா அவரு தன்னோட துணிகளை மட்டும் யாருக்கும் ஓசி தர மாட்டாரு,அப்படி யாராவது தன்னோட துணிகளை ஓசி கேட்டாலும் சூசகமா எதாவது பொய் சொல்லி அவுங்கள அனுப்பிடுவாரு

Introduction to Mulla's Helpful Nature

ஒரு நாள் சந்தைக்கு போயிட்டு திரும்பி வந்த முல்லா தன்னோட வீட்டுல ஓய்வெடுத்துகிட்டு இருந்தாரு அப்ப பக்கத்து வீட்டுல வசிக்கிற ஒரு வியாபாரி முல்லா கிட்ட வந்தாரு

Mulla Returns from Market and Merchant Arrives

முல்லா எனக்கு ஒரு உதவி செய்யணும் அப்படின்னு கேட்டாரு அந்த வியாபாரி ,உடனே முல்லா என்ன உதவினாலும் செய்யுறேன் உங்களுக்கு என்ன உதவி வேணும்னு கேட்டாரு முல்லா

Merchant Asks for a Favor, Mulla Agrees Eagerly

அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு நான் என்னோட நண்பரோட திருமணத்துக்கு நாளைக்கு போறேன், அதுக்கு உடுத்திகிட்டு போறதுக்கு என்கிட்ட நல்ல துணிமணி இல்ல உங்களோட வெள்ளை ஜிப்பா ரொம்ப அழகா இருக்கும் அதை எனக்கு ஒரு நாள் ஓசிதாங்க நான் கல்யாணத்துக்கு போயிட்டு வந்து உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுகிறேன் அப்படின்னு சொன்னாரு

Merchant Requests to Borrow the White Jubbah for a Wedding

இதைக் கேட்ட முல்லாவுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு அடடா நம்ம ஜிப்பாவை ஓசி கேட்கிறாரே இவர் எப்படி சமாளிக்கிறது அப்படினு யோசிச்சார் முல்லா அப்பத்தான் முல்லா சொன்னாரு என்னோட ஜிப்பா ரொம்ப ஈரமா இருக்கு,அத இப்பதான் துவைச்சேன் , அதை நான் வெளியில காய போட்டு இருக்கேன் அதனால உங்களுக்கு கொடுக்க முடியாது அப்படின்னு சொன்னாரு

Mulla's Shock and Polite Excuse About the Wet Jubbah

இதைக் கேட்ட அந்த வியாபாரி சரி முல்லா அப்படின்னு சொல்லிட்டு வெளியில போனாரு அப்பத்தான் அந்த வியாபாரி பாத்தாரு முல்லாவோட ஜிப்பா கொடியில காஞ்சி கிட்டு இருக்குறத உடனே அதை தொட்டு பார்த்தாரு அந்த வியாபாரி

Merchant Checks the Clothesline and Discovers It's Dry

முல்லாவோட ஜிப்பா நல்லா காஞ்சி இருந்துச்சு உடனே திரும்பவும் முல்லாவோட வீட்டுக்குள்ள வந்த அந்த வியாபாரி முல்லா உங்க ஜிப்பா நல்லா காஞ்சிருச்சு போல இன்னைக்கு நிறைய வெயில் அடிச்சதனால உங்க ஜிப்பா வேகமா காஞ்சிருச்சு நான் இப்ப அதை ஓசி வாங்கிட்டு போகலாமா அப்படின்னு கேட்டார்

Merchant Returns and Insists on Borrowing the Now-Dry Jubbah

அடடா இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது யோசிச்ச முல்லாவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல வெளிய வந்து அந்த ஜிப்பால எடுத்து வியாபாரிக்கு கொடுத்தரலாம்னு நெனச்சமுள்ள வெளியே வந்து பார்த்தாரு

Mulla Ponders and Decides to Check Outside

அப்பத்தான் அவர் காய போட்டு இருந்த ஜிப்பாவுக்கு அடியில நனைய வச்சிருந்த அரிசியை அவரோட மனைவி காய போட்டு இருக்கிறத பார்த்தாரு, உடனே அவருக்கு ஒரு நல்ல ஐடியா வந்துச்சு ,இங்க பாருங்க ஈர அரிசி இதை காய வைக்கிறதுக்கு தான் என்னுடைய ஜிப்பாவை அதுக்கு மேல போட்டு இருக்காங்க என்னோட மனைவி

Mulla Spots the Wet Rice and Gets an Idea

இத கேட்ட முல்லாவோட நண்பர் ஒன்னும் புரியாம முழிச்சாரு ,அப்பதான் முல்லா சொன்னாரு ,அங்க பாருங்க கொடியில ஜிப்பா காயுதா ,கத்தடிச்சு ஜிப்பா ஆடுதா ,அதுல வர்ற காத்துல தான் இந்த ஈர அரிசி காஞ்சி கிட்டு இருக்கு ,இப்போ நான் உங்களுக்கு ஜிப்பாவ கொடுத்தேன்னா என்னோட மனைவி கோவிச்சுகுவாங்க அப்படின்னு சொன்னாரு

Mulla Explains the "Wind-Drying" Excuse to the Confused Merchant

இதைக் கேட்ட வியாபாரிக்கு புரிஞ்சு போச்சு முல்லாவுக்கு தன்னோட துணிமணிகளை அடுத்தவங்களுக்கு கொடுக்குறதுல விருப்பமில்லைன்னு உடனே ஒண்ணுமே சொல்லாம அங்கு இருந்து போயிட்டாரு

Merchant Understands and Leaves Quietly

தன் கிட்ட உதவி கேட்ட நண்பரே கண்டபடி பேசாம சூசகமான பதிலை சொல்லி அனுப்பிச்ச முல்லா மாதிரி நாமளும் நடந்துக்கணும்

Emulating Mulla's Polite Ways