Getting Fooled by Mulla – முல்லா ஏமாற்றிய நண்பர்

Getting Fooled by Mulla – முல்லா ஏமாற்றிய நண்பர் :- முல்லாவுக்கு நிறய நண்பர்கள் இருந்தாலும் அவுங்கள முல்லா நிறயதடவ ஏமாத்தி இருக்காரு ,அவரால நிறய பேரு முட்டாளாக்க பட்டு இருக்காங்க

Introduction - Mulla's Reputation

முல்லா ஒருநாள் தன்னோட கழுதையில உக்காந்து பயணம் போய்கிட்டு இருந்தாரு ,அப்ப அவரோட நண்பர் ஒருத்தர் காட்டு வழியில நடந்துகிட்டு இருக்குறத பார்த்தாரு ,உடனே சந்தோசமான முல்லா அவருகிட்ட போய் பேச்சு குடுத்தாரு

Mulla Riding and Spotting Friend

அந்த நண்பரும் முல்லாகூட சேர்ந்து பழங்கதைகளை பேச ஆரம்பிச்சாரு அப்ப அந்த நண்பர் கேட்டாரு முல்லா நீங்க உலகத்துலயே பெரிய புத்திசாலின்னு பேரெடுத்து இருக்கலாம் ,ஆனா என்ன விட பெரிய புத்திசாலி கிடையாதுன்னு சொன்னாரு

Joyful Reunion and Chat

இத கேட்ட முல்லா சொன்னாரு இப்ப எதுக்கு இத பத்தி பேசுறீங்கன்னு கேட்டாரு முல்லா ,அதுக்கு அந்த நண்பர் உங்களைவிட திறமையானவன் நான் எனக்கு கிடைக்க வேண்டிய புகழ் எல்லாம் என்ன விட திறமை குறைவான உங்களுக்கு கிடிக்குதே அதனால சொன்னேன்னு சொன்னாரு

Friend's Boast Begins

ஓஹ் என்ன விட பெரிய புத்திசாலியா நீங்க எனக்கு நிரூபிச்சி காட்டுங்க ,உங்க திறமை என்னனு புரிஞ்சிக்கிறேன்னு சொன்னாரு முல்லா ,உடனே அந்த நண்பர் சொன்னாரு ,நீங்க நம்ம நண்பர்கள் பலர புத்தி சாதுர்யத்தால ஏமாத்தி இருக்கீங்க ,அது எல்லாம் எனக்கு தெரியும்

Mulla Questions, Friend Explains Envy

ஆனா என்ன ஏமாத்த முடியாது ,நான் அவ்வளவு கெட்டிக்காரனு சொன்னாரு ,உடனே முல்லா தன்கிட்ட திமிரா பேசுற இந்த நண்பர இன்னைக்கு கண்டிப்பா முட்டாளாக்கணும்னு நினைச்சாரு ,அப்பத்தான் முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,உடனே அக்கம் பக்கம் எல்லாம் சுத்தி பாத்தாரு

Mulla Challenges, Friend Brags Invincibility

அங்க பயணிகள் இளைப்பாறுற ஒரு கல் இருக்கை இருந்துச்சு ,அது பக்கத்துல ஒரு ரோஜா செடியும் இருந்துச்சு ,உடனே அந்த நண்பர அந்த இருக்கையில உக்கார சொன்னாரு ,அந்த நண்பரும் அந்த இருக்கையில உக்காந்தாரு ,உடனே அந்த ரோஜா செடியில பூத்திருந்த பூவ புடிங்கி அந்த நண்பரோட காதுல சொருகுனாரு முல்லா

Mulla's Resolve and Idea Sparks

சொருகிட்டு இங்க பாருங்க இது புதுசா பூத்த ரோஜா பூ ,இது வாடுறதுக்குள்ள உங்கள நான் முட்டாளாக்கி காட்டுறேன்னு சொன்னாரு முல்லா ,உடனே அந்த நண்பரும் சரி அப்படி இந்த பூ வாடுறதுக்குள்ள என்ன ஏமாத்திட்டீங்கனா என்ன விட புத்திசாலி நீங்கதான்னு நான் ஒத்துக்கிறேன்னு சொன்னாரு

Spotting Bench and Rose Bush, Sitting

உடனே முல்லா ஒரு நிமிஷம் இங்கயே உக்காந்து இருங்க என்னோட திறமைய காட்டுறேன்னு சொல்லிட்டு அங்க இருந்து மெதுவா நடக்க ஆரம்பிச்சாரு முல்லா ,முல்லா போனதுக்கு அப்புறமா அடடா நமக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு இந்த பூ எப்படி நாளும் அறை நாள்ல வாடி போகும்

Tricking with the Rose

அதுக்குள்ள இந்த முல்லா என்ன செஞ்சு நம்மள ஏமாத்துறாருனு பத்துடலாம்னு நினைச்சுகிட்டு சந்தோசமா உக்காந்து இருந்தாரு ,அப்ப அந்த வழியா வந்த மத்த வியாபாரிங்க இது என்ன காதுல பூ சொருகிட்டு முட்டாள் மாதிரி இப்படி உக்காந்திருக்காரு இவரு ,இவருக்கு என்ன பைத்தியம் புடிச்சிடுச்சான்னு அவரு காது படவே பேசுனாங்க

The Bet and Mulla's Departure

முல்லா போய் ஒரு மணி நேரம் ஆச்சு ,ரெண்டு மணி நேரம் ஆச்சு ,மூணு மணி நேரம் ஆச்சு ,அப்பதான் அந்த நண்பருக்கு புரிய ஆரம்பிச்சுச்சு ,இந்த முல்லா ஏற்கனவே நம்மள முட்டாளாக்கி இந்த பூவ காதுல சொருகி ,நம்மள இங்க மணிக்கணக்குல காத்திருக்க வச்சிட்டு போய்ட்டாருனு புரிஞ்சிக்கிட்டாரு

Friend Waits, Merchant Mocks

தேவையில்லாம இந்த முல்லா கிட்ட பந்தயம் கட்டி ஒரு நாள் முழுசும் முட்டாள் மாதிரி ,ஊர் காரங்க முன்னாடி உக்காந்து இருந்தது தான் மிச்சம்னு நினைச்ச அந்த நண்பர் ,அந்த ஊர விட்டே போய்ட்டாரு

Realization and Departure