Mulla The Miser’s Soup – கஞ்சன் கொடுத்த விருந்து

முல்லாவுக்கு எப்பவும் நண்பர்கள்னா ரொம்ப பிரியம் அவங்க கூட சேர்ந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்கிறது முல்லாவுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அதனாலவே ஏதாவது ஊர் திருவிழா நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் அப்படின்னு வந்துச்சுன்னா முல்லா முதல் ஆளா அந்த விழாவை சிறப்பிக்க போயிடுவாரு

முல்லா அவரோட நண்பர்களோட டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிச்சிட்டு இருந்தாரு ஒரு நாள் அப்ப அந்த ஒரு கஞ்சத்தனம் கொண்ட முன்னாவோட நண்பர் வந்தாரு அப்பத்தா முல்லா ஓட நண்பர்கள் நம்ம இதுவரைக்கும் யார் யார் வீட்டில் போய் விருந்து சாப்பிட்டு இருக்கோம் அப்படின்னு வெட்டி பேச்சு பேசி கிட்டு இருந்தாங்க

அப்போ ஒரு நண்பர் சொன்னாரு நம்ம இன்னும் இந்த கஞ்சனோட வீட்ல மட்டும் தான் போயி விருந்து சாப்பிடல ஏன்னா இவன் உலக மகா கஞ்சன் அப்படின்னு சொன்னாரு அதைக் கேட்ட அந்த கஞ்சனுக்கு கோவம் வந்துருச்சு நீங்க எல்லாம் என்ன ரொம்ப கேவலமா பேசுறீங்க நான் இன்னைக்கு உங்களுக்கு சூப் வீ விருந்து வச்சிருக்கேன் இன்னைக்கு சாயந்தரம் எல்லாரும் என் வீட்டுக்கு சூப் குடிக்க வாங்க அப்படின்னு சொன்னாரு

உடனே அங்க இருந்த முல்லாவோட நண்பர்கள் எல்லாருக்கும் ஆச்சரியமா போச்சு அடடா இன்னைக்கு கஞ்சன் விருந்து வைக்கிறானா ஆமா என்ன சூப்பு எங்களுக்கு எல்லாம் கொடுக்க போற அப்படின்னு கேட்டாரு முதல்ல பேசின முல்லா வோட நண்பர். அப்பத்தான் அந்த கஞ்சன் சொன்னா எங்க வீட்டுக்கு பக்கத்துல பெரிய குளம் இருக்கு அங்க நிறைய மீன் இருக்கு அத பிடிச்சு உங்களுக்கு இன்னைக்கு மீன் சூப் வச்சு கொடுக்கப் போறேன் அப்படின்னு சொன்னாரு

இத கேட்ட எல்லாரும் சரின்னு சொல்லிட்டு அவங்க அவங்க வேலைய பார்க்க போய்ட்டாங்க எல்லாரும் சரியா சாயந்திரம் ஆனதும் கஞ்சனோட வீட்டுக்கு சூப் குடிக்க போனாங்க அங்க முல்லா தான் முதல் ஆளா உட்கார்ந்து இருந்தாரு அப்பத்தான் அந்த கஞ்சன் பெரிய சட்டியில ஒரே ஒரு மீனை போட்டு சட்டி முழுசும் தண்ணிய ஊத்தி சூப்புன்ற பேர்ல எதையோ கொண்டு வந்து வச்சாரு

இதைப் பார்த்த உடனே முல்லாவோட நண்பர்கள் எல்லாருக்கும் புரிந்து போச்சு இந்த கஞ்சன் காசு மிச்சம் பண்றதுக்காக ஒரே ஒரு மீனை போட்டு அதுல சட்டி நிறைய தண்ணி ஊத்தி ஒன்பது பேருக்கு சூப் போட்டு இருக்கான் இது சூப்பு இல்ல வெண்ணி தண்ணி அப்படின்னு கிண்டலா பேச ஆரம்பிச்சாங்க இதை கேட்டா முல்லா பக்கத்துல இருந்த மீன்பிடிக்கிற தூண்டிலை எடுத்து உள்ள போட்டாரு

அதைப் பார்த்த எல்லாரும் ஏன் முல்லா மீன் பிடிக்கிற தூண்டிலை எடுத்து சூப்பு சட்டிக்குள்ள போடுறீங்க ஏன் என்ன ஆச்சு அப்படின்னு கேட்டாங்க அப்பத்தான் முல்லா சொன்னாரு விறகு மிச்சம் பண்றதுக்கு இவன் அடுப்பை பத்த வச்சானா இல்ல வெயில்ல வச்சு சூடு பண்ணி கொண்டு வந்தானான்னு தெரியல ஒருவேளை அந்த ஒத்த மீனு உயிரோட இருக்கலாம் வாங்க நம்ம எல்லாம் இதுல கொஞ்ச நேரம் மீன் பிடிச்சு விளையாடலாம் அப்படின்னு சொன்னாரு

இதைக்கேட்ட அந்த கஞ்சனுக்கு ரொம்ப சங்கடமா போச்சு நம்ம பணத்த மிச்சம் பண்றதுக்காக ரொம்ப கவனமா இருக்கலாம் ஆனால் இவ்வளவு கஞ்சமா இருக்கக் கூடாதுன்னு தன்னோட நண்பர்கள் தங்களுக்கு உணர்த்திட்டாங்க அப்படின்னு புரிஞ்சுகிட்டு ரொம்ப அமைதியாவே இருந்தாரு அந்த கஞ்சன்