Mulla and Smoke Story – முல்லா குப்பையில் தீ -குழந்தைகள் கதை :-முல்லாவுக்கு பிடிக்காத விஷயத்தை யாராவது செஞ்சா அவங்களுக்கு புரியிற மாதிரி முதல்ல எடுத்து சொல்லுவாரு அதையும் மீறி திரும்பத் திரும்ப தப்பு செஞ்சா அவங்களுக்கு சரியான பதிலடி கொடுக்காம விடமாட்டாரு முல்லா

ஒரு நாள் தன்னோட வீட்டு வாசல்ல உக்காந்திருந்த முல்லாக்கு ஏதோ கருகுற வாடை அடிச்சுச்சு ஐயோ எதுவும் தீ பிடிச்சுருச்சு போல அப்படின்னு நினைச்ச முல்லா ரொம்ப பயந்து போய்ட்டாரு ,அந்த புகை வாடை எங்க இருந்து வருதுன்னு பார்க்க தன்னோட வீட்டை சுத்தி பார்த்தாரு

அப்பத்தான் பக்கத்து வீட்டுக்காரர் அங்க இருந்த குப்பை எல்லாம் கூட்டி வச்சு தீ எரிச்சி புகை போட்டுகிட்டு இருக்கிறத பார்த்தாரு, எதுக்குப்பா இப்படி குப்பைய எரிச்சி அதிகமா புகை போடுற என்னால மூச்சு கூட விட முடியல அப்படின்னு சொன்னாரு முல்லா

அத கேட்ட அந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு இங்க நிறைய கொசுத்தொல்ல இருக்கு,கொசு தொல்லையில இருந்து நம்ம கிராமத்துல இருக்குற எல்லாத்தையும் காப்பாத்தணும்ல , அதையெல்லாம் வெரைட்டருக்காக தான் இப்படி புகை போடுறேன் கொசு கடிச்சா எனக்குத்தானே ரொம்ப வலிக்குது உங்க வேலையை நீங்க பாருங்க அப்படின்னு திமிர் தனமா சொன்னாரு அந்த பக்கத்து வீட்டு காரர்

இந்த ஆளு திமிர் பிடிச்ச ஆளா இருக்காரு இவர்கிட்ட நல்லபடியா சொன்னோம்னா எதுவும் நடக்காதுன்னு புரிஞ்சுகிட்ட முல்லா இவரை எப்படியாவது மாத்தணும்னு நினைச்சாரு,இந்த ஆள எப்படி கவுக்குறதுனு வீட்டுல உக்காந்து யோசிச்சிகிட்டு இருந்தாரு முல்லா

அப்பத்தான் முன்னாவோட மனைவி சொன்னாங்க அந்த ஆளுக்கு கத்திரிக்காய் ஆகாது கத்திரிக்காய் சாப்பிட்டு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து கொப்பளமா வந்துடுச்சு அதனால அவர் கத்திரிக்காயை பார்த்தாலே ஓடிடுவாரு அதை வேணா நீங்க முயற்சி செஞ்சு பாருங்க அப்படின்னு ஒரு நல்ல ஐடியா கொடுத்தாங்க முல்லா வோட மனைவி

மறுநாள் சாயந்தரம் அந்த பக்கத்து வீட்டுக்காரர் குப்பை எல்லாம் கூட்டி தீ வைக்கிறதுக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருந்தாரு அப்பத்தான் முல்லா நிறைய கத்திரிக்காய் எடுத்து ஒவ்வொண்ணா அந்த வியாபாரி முன்னாடி போட்டுக்கிட்டு இருந்தாரு

அதைப் பார்த்த அந்த வியாபாரிக்கு பயம் வந்து கத்த ஆரம்பிச்சிருச்சுட்டாரு , முல்லா அவர்களே எதுக்கு இப்படி நீங்க கத்திரிக்காய தூக்கி தரையெல்லாம் போட்டு வச்சிருக்கீங்க அப்படின்னு கேட்டாரு அந்த வியாபாரி,எனக்கு இத பார்த்தாலே உடம்பு எல்லாம் ஊறுது ,தயவு செஞ்சு நிறுத்துங்கனு சொன்னாரு

அதுக்கு முல்லா சொன்னாரு கத்திரிக்காயை பார்த்தா புலி எல்லாம் ஓடிப் போயிரும் நம்ம கிராமத்தை புலிகிட்ட இருந்து காப்பாத்துறதுக்குத்தான் நம்ம தெரு முழுசும் கத்திரிக்காய போட்டுக்கிட்டே வர்றேன் அப்படின்னு சொன்னாரு

அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு இங்க என்ன புலி நடமாட்டமா இருக்கு நம்ம ஊருக்கு புலி வந்ததே கிடையாது நீங்க எதுக்கு இப்படி பயந்து போயி கத்தரிக்காயை போட்டு எனக்கு சங்கடத்தை உண்டு பண்றீங்க அப்படின்னு கேட்டாரு அந்த வியாபாரி

அப்பத்தான் முல்லா சொன்னாரு நீ மட்டும் கொசு கிட்ட இருந்து கிராமத்த காப்பாத்துறேன்ற பேர்ல குப்பையை போட்டு அதுல தீய வச்சி புகை போட்டு அடுத்த வீட்டுக்காரங்களுக்கு தொல்லை பண்ணலாம் நான் புலியை விரட்டி நம்ம கிராம மக்கள காப்பாத்த கத்திரிக்காய் போட கூடாதா அப்படின்னு கேட்டாரு

இதைக் கேட்டு அந்த வியாபாரிக்கு அப்பத்தான் உரசிச்சி தன்னோட சுயநலத்துக்காக அடுத்தவங்களுக்கு தொல்லை பண்ற மாதிரி இப்படி புகை போட்டு காத்த மாசுபடுத்துனது ரொம்ப தப்பு அதைத்தான் இந்த முல்லா நமக்கு அவரோட வழியில சொல்லுறாருனு புரிஞ்சுகிட்டாரு

உடனே முதல் நாள் முள்ளாகிட்ட திமிர்த்தனமா பேசுனதுக்கும் குப்பைகளை எரிச்சு புகை போட்டு காத்த மாசுபடுத்துனதுக்கும் மன்னிப்பு கேட்டார் அந்த வியாபாரி