A Token of Friendship – Mulla Funny Story – முல்லா நஸ்ருதீன் கதை :- முல்லா தன்னோட கிராமத்துல அமைதியா வாழ்ந்துகிட்டு வந்தாரு ,நகைச்சுவையா பேசுறதாலயும் புத்திசாலித்தனமா நடந்துக்குறதாலயும் முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க

அவுங்க எந்த செயல் செஞ்சாலும் ,எந்த முடிவு எடுத்தாலும் முல்லாவ ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுதான் செய்வாங்க ,அப்படி ஒரு நாள் முல்லாவோட நண்பர் ஒருத்தரு முல்லாவ பார்க்க வந்தாரு ,முல்லா அவரை வரவேற்று வீட்டுக்குள்ள உக்கார வச்சாரு

அப்பதான் அவரு சொன்னாரு எனக்கு இங்க இருக்குற விவசாய வேலைகள் பிடிக்கிறது இல்லை ,அதனால பட்டணம் போயி வேற எதாவது வேலை செஞ்சு பொழச்சுக்கிடலாம்னு இருக்கேனு சொன்னாரு ,இத கேட்ட முல்லா நீங்க நல்ல உழைப்பாளி உங்கள மாதிரி ஆளுங்க பட்டணத்துல போயி நல்ல படியா உழைச்சா நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நீங்க பட்டணம் போகுறதுக்கு நான் துணையா இருக்கேனு சொன்னாரு

அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு உங்களோட ஆலோசனைகளை கேட்டு வாழ்ந்துகிட்டு வந்த நான் பட்டணம் போனதும் உங்கள ரொம்ப நினைச்சுக்குவேன் ,உங்கள மாதிரி நண்பர் எனக்கு அங்க கிடைப்பாரான்னு தெரியாது இருந்தாலும் உங்கள நினச்சுகிட்டே அங்க வேலை செய்வேன்னு சொன்னாரு

அதுக்கு முல்லா எனக்கு உங்கள பிரியிறது வருத்தமாத்தான் இருக்கு அதுக்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாம இருக்க முடியாது ,அதனால நீங்க எதுவும் நினைக்காம ஊருக்கு கிளம்பி போங்கன்னு சொன்னாரு முல்லா

உடனே அந்த நண்பர் சொன்னாரு ,உங்க உதவியாலும் ஆலோசனையாலயும் நான் இங்க ரொம்ப நல்லா இருந்தேன் ,பட்டணத்துலயும் உங்க துணை எனக்கு வேணும் எப்ப எல்லாம் உங்க ஞாபகம் வருதோ அப்ப உங்கள நினைச்சுக்கிற மாதிரி உங்க கையில போட்டு இருக்குற மோதிரத்தை எனக்கு போட்டு விடுங்க , உங்க ஞாபகம் வர்றப்ப எல்லாம் அத பார்த்து மனச தேத்திக்கிறேன்னு சொன்னாரு

உடனே முல்லா இது என்ன நம்ம தங்க மோதிரத்தை பரிசா கேக்குறாரே இதுல ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே ,இத எப்படி சமளிக்குறதுனு யோசிச்சாறு ,உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு

அந்த நண்பர்கிட்ட இப்ப நான் உங்களுக்கு இந்த மோதிரத்தை போட்டு விட்டா அத பார்த்து என்ன நினைச்சுப்பீங்க ,ஆனா இத போட்டு விடலைனா உங்க வெத்து விரலை பார்குறப்ப எல்லாம் என் ஞாபகம் வரும் அது நாள் முழுசும் உங்கள யோசிக்க வைக்கும் அதனால வெறும் கையோடயே போங்கன்னு சொன்னாரு

அடடா நாம தந்திரமா பேசி முல்லா கிட்ட இருந்து அந்த தங்க மோதிரத்தை வாங்கிட்டு பட்டணம் போகலாம்னு நினைச்சா ,இந்த மனுஷன் சுதாரிச்சுகிட்டாரேன்னு சொல்லிட்டு அங்க இருந்து வெறும் கையோட பட்டணம் போனாரு முல்லாவோட நண்பர் ,எப்ப எல்லாம் தன்னோட வெறும் கைய பாக்குறாரோ அப்ப எல்லாம் பேராசையால முல்லா கிட்ட பேசி ஏமாந்து போனது தான் அவருக்கு ஞாபகம் வந்துச்சு
