Magic Castle Halloween Story For Kids-Funny Story – மந்திர குகை :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு நகரம் இருந்துச்சு

அந்த நகரத்துல வாழ்ந்த ஒரு பாட்டி தன்னோட நாய் குட்டிய கூட்டிகிட்டு வாக்கிங் போனாங்க

நாய் குட்டி திடீர்னு ஒரு குகை பக்கம் அவுங்கள இழுத்துகிட்டு போச்சு

அந்த குகை ரொம்ப பயங்கரமா இருந்துச்சு ,அந்த குகையோட வாசல்ல யாரும் உள்ள போகாதீங்க ஆபத்துனு எழுதி தொங்க விட்டு இருந்தாங்க

அதனால் உள்ள போகாம வீட்டுக்கு வந்துட்டாங்க அந்த பாட்டி ,இருந்தாலும் அந்த குகைக்குள்ள என்ன இருக்கும் ,ஏதாவது பேய் இருக்குமா ,இல்ல ஏதாவது புதையல் இருக்குமான்னு ஒரே யோசனையாவே இருந்துச்சு அவுங்களுக்கு

அப்பத்தான் தாத்தா வீட்டுக்கு வந்தாரு ,அவரு ரொம்ப தைரியசாலி , அவருகிட்ட தான் பார்த்த குகையை பத்தி சொன்னாங்க பாட்டி

அது ஆபத்தான குகைனு எழுதி இருந்தா அதுக்குள்ள போகத்தனு சொல்லிட்டு ,தூங்க போய்ட்டாரு தாத்தா

இருந்தாலும் பாட்டிக்கு அந்த குகைக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிட ரொம்ப ஆவலா இருந்துச்சு ,அதனால ரெண்டுநாள் கழிச்சு ராத்திரியில தாத்தா தூங்குனதும் எந்திரிச்சி அந்த குகைக்கு போனாங்க

அந்த குகைக்குள்ள ரொம்ப இருட்டா இருந்துச்சு ,அதுக்குள்ள போனதும் ஒரு மாளிகை மாதிரி ஒரு கட்டிடம் இருந்துச்சு

அதோட கதவுலயும் உள்ள வராதீங்கன்னு எழுதி ஒட்டி இருந்துச்சு ,பாட்டிக்கு ரொம்ப பயமா போச்சு இருந்தாலும் தைரியத்தை வர வச்சிக்கிட்டு உள்ள போனாங்க ,அங்க ஒரு ஜன்னல் வழியா நிலா வெளிச்சம் வந்துகிட்டு இருந்துச்சு

அந்த நிலா வெளிச்சத்துல ஒரு பெரிய பேட்டி அவுங்களுக்கு கண்ணுல பட்டுச்சு ,உடனே ரொம்ப ஆர்வமான பாட்டி அத தொறந்து பார்த்தாங்க

அதுக்குள்ள ஒரு லெட்டர் இருந்துச்சு ,அடடா இது என்னனு படிக்க ஆரம்பிச்சாங்க ,அதுல , ” உன்ன நான் இந்த குகைக்கு வர கூடாதுனு சொன்னன்ல எதுக்கு வந்த ,இங்க மட்டும் இல்ல எங்கயும் பேயும் கிடையாது புதையலும் கிடையாது ,வேகமா வீட்டுக்கு வந்து தூங்குன்னு ” தாத்தா எழுதி வச்ச கடிதம்தான் இருந்துச்சு
புதையல் தேடி வந்த பாட்டிக்கு ஒரே அசிங்கமா போச்சு ,நேர வீட்டுக்கு வந்து தாத்தா கிட்ட செம டோஸ் வாங்குனாங்க