தர்மம் பண்ணுங்க ஐயா
லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய ‘Warx Peace’ என்ற நூல் உலகப் புகழ் பெற்றதாகும் ஒரு சமயம் டால்ஸ்டாய் நகர வீதி ஒன்றில் நடந்து
சென்று கொண்டிருந்தார்
அப்போது ஒரு பிச்சைக்காரன் அவரை நெருங்கி ஐயா ஏதாவது தர்மம் பண்ணுங்க!” என்று கேட்டான்
டால்ஸ்டாய் மணிபர்லை எடுப்பதற்காகத் தனது கோட் பையிற்குள் கையை விட்டார். அப்பொழுதுதான் அதை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே மனவருத்தத்துடன் அவர் பிச்சைக் காரனைப் பார்த்தார்.
சாரி பிரதர்! என்னிடம் காசில்லை என்றார் டால்ஸ்டாய்
அதைக் கேட்ட அந்தப் பிச்சைக்காரன், “ஐயா நீங்கள் மிகவும் உயர்ந்தவர். நான் ஓர் ஏழையாக இருந்த போதும் என்னை பிரதர் என்று அழைத்தீர்களே. இந்த சகோதரப் பாசமே எனக்குப் போதும். நீங்கள் காசு கொடுக்காதது பற்றி எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை ” என்றார்.
லியோ டால்ஸ்டாய் மனம் நெகிழ்ந்து போனார்