ராமு சோமு தன்னம்பிக்கை கதை – Kids Motivational Story :- ராமுவும் சோமுவும் மிகசிறந்த நண்பர்களா இருந்தாங்க

அவுங்க எப்பவும் ஒன்னாவே விளையாடுவாங்க

ஒருநாள் அவுங்க வசிச்ச கிராமத்த தாண்டி ரொம்ப தூரம் போய் விளையாண்டாங்க

அப்ப ராமு கால் தவறி அங்க இருந்த கிணத்துக்குள்ள விழுந்துட்டான்

ரொம்ப பயந்துபோன ராமு தன்ன காப்பாத்த சொல்லி கத்துனான்,சத்தம் கேட்ட சோமு அங்க வந்து பார்த்தான்

அவனும் யாராவது உதவிக்கு வாங்கனு கூப்பிட்டுப்பார்த்தான்

ஆனா அவுங்களுக்கு உதவி செய்ய அங்க யாருமே இல்ல
அப்பதான் அங்க ஒரு வாலியும் கயிறும் இருக்குறத பார்த்தான் சோமு உடனே ,வாலிய எடுத்துட்டு வந்து ராமுகிட்ட தொங்க விட்டான்

உடனே ராமு அந்த வாலிய பிடிச்சிகிட்டான் ,உடனே ரொம்ப கஷ்டப்பட்டு அந்த கயித்த இழுத்து ராமுவ காப்பாத்துனான் சோமு

ரெண்டு பேரும் தங்களோட கிராமத்துக்கு வந்து நடந்ததை சொன்னாங்க ,ஆனா ஊருல இருந்த யாரும் அவுங்க பேச்சை கேக்கல

அது எப்படி ஒரு சின்ன பையன் கிணத்துக்குள்ள இருக்குறவன இழுத்து தூக்க முடியும்னு கேட்டாங்க
அப்பத்தான் அங்க இருந்த ஒரு தாத்தா சிரிச்சாரு ,உடனே எல்லாரும் அவருகிட்ட ஏன் சிறுசீங்கனு கேட்டாங்க

அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு ,நான் அந்த பையன நம்புறேன் ,அவன் சொன்னது உண்மையா தான் இருக்கும் ,தன்னோட நண்பனை காப்பாத்தும்போது உங்கள மாதிரி நம்பிக்கை இல்லாத சொற்களை யாரும் அவன்கிட்ட சொல்லல

அதனால அவன் கண்டிப்பா பலசாலிதான் , அவனோட பலத்தையும் தன்னம்பிக்கையும் சேரும்போது அவன் மிகப்பெரிய சாதனையை செஞ்சிருக்கான்

ஒருவேளை உங்கள மாதிரி யாராவது உன்னால முடியாது ,வாலிய தூக்க உனக்கு பலம் போகாதுனு சொல்லி இருந்தா ,அவனோட தன்னம்பிக்கை தகர்ந்து அவனோட நண்பனை காப்பாத்த முடியாம கூட போயிருக்கலாம்
தன்னம்பிக்கையோட சின்ன செயலை செஞ்ச குழந்தைகிட்ட தன்னம்பிக்கை வளர்க்கிற சொற்களை சொல்லுங்க ,இது மாதிரி அவநம்பிக்கையான சொர்க்கலை சொல்லாதீங்கன்னு சொன்னாரு
உடனே அங்க இருந்த எல்லாருக்கும் ரொம்ப அசிங்கமா போய்டுச்சு ,அதுக்கப்புறமா ராமுவ காப்பாத்துன சோமுவை எல்லாரும் பாராட்டுனாங்க