Four Fools- நான்கு முட்டாள்கள் – அக்பர் பீர்பால் கதை

Four Fools- நான்கு முட்டாள்கள் – அக்பர் பீர்பால் கதை :- ஒருநாள் அரசரும் பீர்பாலும் நகர வீதில நடந்து போய்கிட்டு இருந்தாங்க ,அப்ப அக்பர் கேட்டாரு பீர்பால் நம்ம நாட்டுல இருக்குற நாலு முட்டாள்கள கூட்டிகிட்டு வந்து என்கிட்டே கட்டுங்கனு சொன்னாரு

உடனே பீர்பால் நாலு முட்டாள்களை தேடி போனாரு ,அப்படி போறப்ப ஒருத்தரு குடை மேல ஓட்ட போட்டுக்கிட்டு இருந்தாரு

அவர்கிட்ட பீர்பால் கேட்டாரு எதுக்கு நல்லா இருக்குற குடைல ஓட்ட போடுறீங்கன்னு கேட்டாரு ,அதுக்கு அவர் சொன்னாரு மழை நின்னுடுச்சான்னு அது வழியா பாக்கலாம்லன்னு

உடனே அவர தன்னோட கூட்டிகிட்டு நடக்க ஆரம்பிச்சாரு அப்ப ஒருத்தர் தன்னோட தலையில புல்லு கட்ட தூக்கிகிட்டு குதிரைமேல உக்காந்துகிட்டு போனாரு

உடனே ஏன் இப்படி தலைமேல புல்லுக்கட்ட வச்சிருக்கீங்க அத குதிரை மேல வச்சிக்கிட்டு போகலாம்லன்னு கேட்டாரு அதுக்கு அந்த ஆள் சொன்னாரு ஏற்கனவே என்னோட பாரத்த குதிர தாங்காது அதனால இந்த புல்ல நான் தூக்கிகிட்டேன்னு சொன்னான்

உடனே அவனையும் கூட கூட்டிகிட்டு அக்பர்க்கிட்ட போனாரு பீர்பால்,அவுங்கள பார்த்த அக்பர் கேட்டாரு நான் நாலு முட்டாள்கள கூட்டிட்டு வர சொன்னா நீங்க ரெண்டு முட்டாள்கள மட்டும் கூட்டிட்டு வந்திருக்கீங்க ஏன்னு கேட்டாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு ,நம்ம அரண்மனை வேலை நிறைய இருக்கிறப்ப முட்டல்களை தேடி அலைஞ்ச நான் மூணாவது முட்டாள்னு சொன்னாரு

உடனே அக்பர் சொன்னாரு அந்த வேலைய செய்ய சொன்னவன் நாலாவது முட்டாள் சரிதானேனே கேட்டாரு

பீர்பால் சிரிச்சிகிட்டே நின்னாரு ,உடனே அக்பரும் சிரிச்சாரு