முட்டாள் பட்டினம்-Foolish Musicians

முட்டாள் பட்டினம்-Foolish Musicians|:-ஒரு ஊருல ரெண்டு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவங்கள்ல ஒருத்தன் நாதஸ்வரம் வாசிப்பான் இன்னொருத்தன் மிருதங்கம் வாசிப்பான்

ரெண்டுபேரும் ஒருநாள் சண்டை போட்டுட்டாங்க ,அதுல இருந்து ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் சிக்கல்ல மாட்டிவிட்டு சந்தோஷப்பட்டாங்க

ஒருநாள் முட்டாள் பட்டினம்ங்கிற ஊருல திருவிழா நடந்துச்சு ,அங்க இவுங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு இருந்தாங்க

ரெண்டு பேரும் அங்க போனதுக்கு அப்புறமா அங்க இருந்த எல்லாரும் பெரிய முட்டாள்கள்னு தெரிஞ்சுக்கிட்டாங்க

உடனே அவங்களை வச்சு ஒருத்தரை ஒருத்தர் மாட்டிவிட நினைச்சாங்க

மிருதங்கம் வாசிக்கிறவரு பக்கத்துல இருந்த முட்டாள் கிட்ட ,என்ன அந்த நாதஸ்வரம் வாசிக்கிறவர் வெறும் குழலை மட்டும் வாசிக்கிறாரு உள்ள ஸ்வரத்தை காணோமேனு சொன்னாரு

அதுக்கு அந்த முட்டாள் ஊர் காரங்க நாதஸ்வரதுக்குள்ள விரலை விட்டு பாத்துட்டு ரொம்ப போகிட்டாங்க

நீ என்ன நாதஸ்வரம்னு சொல்லிட்டு வெறும் குழலை வாசிசிட்டு இருக்கன்னு கோப பட்டு அவரை அடிக்க ஆரம்பிச்சாங்க

உடனே அவர் சொன்னாரு ஐயா அந்த ஸ்வரம் அந்த மிருதங்கத்துக்குள்ள தாங்க இருக்கு வேணும்னா அத பிரிச்சி வெளிய விட்டுட்டு அந்த மிருதங்கத்தை அடிச்சி பாருங்கனு சொன்னாரு

உடனே அந்த முட்டாள் ஊரு காரங்க எல்லாரும் சேர்த்து அந்த மிருதங்கத்தை ஒடச்சு உள்ள ஸ்வரம் இருக்கானு பாத்தாங்க

ஆனா அதுக்குள்ள ஒண்ணுமே இல்லை ,உடனே அந்த நாதஸ்வரம் வாசிக்கிறவர் ,அந்த மிருதங்கம் வாசிக்கிறவன் உங்களுக்கு தெரியாம அத தின்னுட்டேன் போல

இப்ப அந்த மிருதங்கத்தை வாசிச்சு பாருங்கன்னு சொன்னாரு ,உடைஞ்சு போன மிருதங்கத்துல இருந்து தொப்பு தொப்புனு சத்தம் தான் வந்துச்சு

உடனே எல்லாரும் சேந்து அவரை அடிச்சி தொரத்திட்டாங்க

ஊருக்கு வெளியில வந்த அவுங்க ரெண்டுபேரும் நம்மளுக்குள்ள இருந்த போட்டி பொறாமையால நாதஸ்வரமும் போச்சு மிருதங்கமும் போச்சு

இதைத்தான் திருவள்ளுவர்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்

அப்படிங்கிற குறள்ல சொல்லிருக்காருனும் , அதுக்கு விளக்கமா ,ஒருத்தர் அடுத்தவனை பத்தி கோர சொன்னா இன்னொருத்தர் அவன பத்தி கோர சொல்லுவாருனு சொல்லிருக்குனு சொன்னாரு

அந்த திருகுறளோட அர்த்தத்தை புரிஞ்சிக்கிட்டு ரெண்டுபேரும் ,மீண்டும் நண்பர்களா மாறிட்டாங்க