கல்லில் எழுதிய கவி – Foolish King Tamil Small Story

கல்லில் எழுதிய கவி – Foolish King Tamil Small Story:- ஒரு காலத்துல ஒரு முட்டாள் அரசர் இருந்தாரு ,அவருக்கு சின்ன வயசுல இருந்து படிக்கிறதுனா பிடிக்காது ,அதனால படிக்காமயே வளர்ந்தாரு

Foolish King Tamil Small Story

படிக்காததாள அவருக்கு அறிவு கம்மியா இருந்துச்சு ,யார் அவரை பத்தி புகழ்ந்து பாடி நாலும் அவுங்களுக்கு நிறைய பணம் பரிசு கொடுப்பாரு.

அவர பத்தி பாட்டு எழுதிகொண்டுவந்தவங்களுக்கு அந்த ஓலைக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்க ஆரம்பிச்சாரு அந்த முட்டாள் அரசர்

Foolish King Tamil Small Story

அரசரோட இந்த அறியாமைய போக்க அந்த நாட்டோட மந்திரி ஒரு யோசனை செஞ்சாரு

ஒருநாள் அரசர்கிட்ட வந்த அமைச்சர் அரசே உங்கள பத்தி இன்னைக்கு நான் ஒரு கவிதை எழுதி கொண்டுவந்திருக்கேன்னு சொன்னாரு.

அப்படியா எங்க காமிங்கன்னு சொன்னாரு அரசர்

அரசே அப்ப அந்த கவிதா எழுதுன பொருளோட எடைக்கு எடை தங்கம் எனக்கும் கிடைக்குமான்னு கேட்டாரு அவரு

Foolish King Tamil Small Story

அதுக்கு அந்த அரசரும் ஒத்துக்கிட்டாரு ,அப்பத்தான் அரசர கூட்டிட்டு போய் ஒரு பெரிய பாறையை காமிச்சாரு ,அந்த பாறைல அரசர புகழ்ந்து கவிதை செதுக்கி இருந்தது

அடடா இந்த பாறைக்கு இருக்குற எடைக்கு தங்கம் கொடுத்தா கஜானாவே காலியாகிடுமே அப்படினு நினைச்சு வருந்தி நின்னாரு அரசர்

அப்பத்தான் படிப்பறிவு இல்லாம இருக்குறத எவ்வளவு தவறுன்னு அரசருக்கு எடுத்து சொன்னாரு மந்திரி

மந்திரியோட சொல்படி ஒரு ஆசிரியரை அன்னைக்கே வரவச்சு படிக்க ஆரம்பிச்சாரு அந்த அரசர்