சினம் காத்தல் – Controlling Anger Moral Story in Tamil :- ஒரு ஊருல ஆனந்த்னு ஒரு சின்ன பையன் இருந்தான்,அவனுக்கு அடிக்கடி கோபம் வரும்,

அவனோட அப்பா தன்னோட பையன் இப்படி கோபப்படுறது அவனுக்கும் ,அவனோட எதிர்காலத்துக்கும் ஆபத்துனு நினைச்சாரு,அத போக்குறதுக்கு அவர் ஒரு யோசனை பண்ணுனாரு
அவன கூப்பிட்டு தம்பி வர வர நீ ரொம்ப கோபப்படுற அது உனக்கு நல்லது இல்ல அதனால நீ கோபப்படுரத கொறச்சுக்கிடணும்னு சொன்னாரு,
உடனே அதுக்கு அவன் சொன்னான் என்னால கோபத்த கட்டுப்படுத்த முடியல அப்பான்னு சொன்னான் ,உடனே அவுங்க அப்பா அவன்கிட்ட உனக்கு பிடிச்ச அந்த வேலியில உனக்கு எப்பல்லாம் கோபம் வருதோ அப்ப எல்லாம் ஒரு ஆணி அடின்னு சொன்னாரு

சொல்லிட்டு ஒரு பை நிறைய ஆணியையும்,சுத்தியலையும் கொடுத்தாரு,உடனே அவன் இப்பலாம் கோபம் வருதோ அப்ப எல்லாம் ஆணி அடிக்க ஆரம்பிச்சான்
முதல் வாரத்துல 100 ஆணி அடிச்ச அவனுக்கு தான் எவ்வளவு கோபப்படுறோம்ன்ற அளவு புரிய ஆரம்பிச்சது,அடுத்த வாரம் 50 ஆணி அடிச்சான் ,தொடர்ந்து அவனோட ஆணியும் கோபமும் கொறய ஆரம்பிச்சது

அவனோட கோபம் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சது ,அப்ப அங்க வந்த அவனோட அப்பா ஒரு திருக்குறள சொன்னாரு
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
உன்னோட கோபத்த நீ கட்டுப்படுத்தலைனா அந்த கோபமே உன்ன கொன்னுடும் ,அதுதான் அந்த திருகுறளோட விளக்கம்

அதுமாதிரி இப்ப பாரு நீ எவ்வளவு கோபத்தை கட்டுப்படுத்தி இருக்கன்னு ,தொடர்ந்து நல்ல பழக்கங்களை கடைபிடிச்சு,காரணம் இல்லாம வர்ற கோபத்தை கட்டுப்படுதுன்னு சொன்னாரு
அன்னைல இருந்து தன்னோட கோபத்தை கொறச்சு நல்ல பிள்ளையா மாறிட்டான் ஆனந்த்