Clever Dear – Story telling for kids

Clever Dear – Story telling for kids :- பட்டியூர்ன்ற காட்டு பகுதியில ஒரு மான் குடும்பம் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு

Clever Dear - Story telling for kids

அந்த மான் கூட்டம் எப்பவும் காலைல எந்திரிச்சு உணவு தேடி போகும்

அப்படித்தான் ஒருநாள் ஒரு மான் தன்னோட குட்டிகள கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போச்சு

அப்ப அங்க ஒரு குகையை பாத்துச்சு,

எல்லா மான்களையும் உள்ள கூட்டிட்டு போனா எதாவது ஆபத்து வந்துடும்னு , அம்மா மான் மட்டும் உள்ள போச்சு

அங்க நிறைய எலும்புகள் நிறைய இருந்துச்சு, அடடா இது சிங்கம் வாழுற குகை போல ,நல்ல வேலை இங்க குழந்தைகளை உள்ள கூட்டிட்டு வரல அப்படினு நினைச்சது

அந்த நேரத்துலதான் வெளிய சிங்கம் வர்ற சத்தம் கேட்டுச்சு

அடடா வெளிய குழந்தைகள் இருக்கே சிங்கத்தால ஆபத்து வந்துடப்போகுதுன்னு பயந்தது

அப்ப அந்த மானுக்கு ஒரு யோசனை செஞ்சது

உடனே பெரிய குரல்ல “குழந்தைகளா அந்த சிங்கம் வந்துடுச்சான்னு பாருங்க அத ஒரே அடியில அடிச்சு கொன்னுடுவோம் அப்படின்னு சொன்னது”

குகை வாசல்ல மான் குட்டிகளை பாத்த சிங்கம் அடடா இன்னைக்கு மான் குட்டிகளை சாப்பிடலாம்னு நினைச்ச போதுதான் அந்த மனோட குரல் கேட்டுச்சு

இது என்ன என்னையே கொல்ற பெரிய மிருகமா உள்ள இருக்குறது

நம்ம இப்படியே ஓடிட வேண்டியதுதான் அப்படின்னு நினச்ச சிங்கம் வேகமா ஓடி போயிடுச்சு

சமயோஜிதமா யோசிச்சு தன்னையும் தன்னோட குட்டியையும் காப்பாத்துன மான் மாதிரி எல்லோரும் புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டம்னா எந்த ஆபத்தும் நமக்கு வராது

2 thoughts on “Clever Dear – Story telling for kids”

Comments are closed.