Alice in Wonderland short story PDF Tamil- அலைஸ் ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்- ஒரு காலத்துல ஆலிஸ்னு ஒரு அழகான பொண்ணு வாழ்ந்துகிட்டு வந்தா

ஒருநாள் அவளும் அவளோட அக்காவும் தோட்டத்துல உக்காந்து இருந்தாங்க ,அவளோட அக்கா புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தா அதனால ஆலிஸ்க்கு ரொம்ப போர் அடிச்சுச்சு

அப்பத்தான் ஒரு குட்டி முயல் பிங்க் கலர் கண்ணோட அவங்கள கடந்து போறத பார்த்தா ஆலிஸ்

அந்த முயல் அங்க இருக்குற ஒரு சின்ன பொந்து குள்ள போறதையும் பார்த்தா

ரொம்ப போர் அடிச்சதால அந்த முயல் எங்க போகுதுனு பார்க்க ரொம்ப ஆவலா இருந்துச்சு ஆலிஸ்க்கு

உடனே எழுந்து அந்த பொந்தை போய் பார்த்தா ஆலிஸ்

அந்த பொந்து சின்னதா இருந்துச்சு ,திடீர்னு அந்த பொந்து பெருசாகி அவ அந்த பொந்துக்குள்ள விழுந்துட்டா

அங்க நிறய கதவுகள் இருந்துச்சு ,அதுல ஒரு சின்ன கதவ தொறந்து அந்த முயல் அவளை பார்த்துச்சு,உடனே கோபப்பட்டு கதவ மூடிகிடுச்சு அந்த முயல்

அப்பத்தான் அங்க ஒரு டேபிள் இருந்தத கவனிச்சா ஆலிஸ் ,அதுல ஒரு மருந்தும் ஒரு சாவியும் இருந்துச்சு

அந்த மருத்து இருந்த பாட்டில்ல அத குடிக்க சொல்லி எழுதி இருந்துச்சு ,உடனே அத குடிச்சா ஆலிஸ்

அந்த மருந்த குடிச்சதும் அவளோட உடம்பு சுருங்க ஆரம்பிச்சுச்சு , அவ ரொம்ப குட்டியா மாறிட்டா ,

அவ கையில வச்சிருந்த பாட்டில் கூட அவளை விட பெருசா இருந்துச்சு

மெதுவா அந்த கதவுகிட்ட போன ஆலிஸ் தன் கையில வச்சிருந்த சாவிய போட்டு அந்த குட்டி கதவ தொறந்தா

அந்த கதவு ஒரு அழகான தோட்டத்துக்கு அவளை கூட்டிட்டு போச்சு

அவ குட்டியா மாறிட்டதால அங்க இருந்த சின்ன புல் கூட தென்னை மரம் மாதிரி உயரமா தெரிஞ்சுச்சு அவளுக்கு

அப்ப அந்த முயல் அங்க வந்துச்சு ,இனிமே நீ எனக்கு அடிமை போய் அங்க ஒரு விசிறி இருக்கும் அத எடுத்துட்டு வானு ரொம்ப கோபமா சொல்லுச்சு

முயலோட கோபத்த பார்த்த ஆலிஸ்க்கு ரொம்ப வருத்தமா போச்சு ,இருந்தாலும் முயல் சொல்ற படி செய்ய முடிவு செஞ்சா

வீட்டுக்குள்ள போன ஆலிஸ் அங்க ஊரு கேக் இருக்குறத பார்த்தா ,அந்த கேக் முன்னாடி அத சாப்பிட சொல்லி எழுதி இருந்துச்சு

உடனே கொஞ்சம் கேக் எடுத்து சாப்பிட்டா ஆலிஸ் ,உடனே அவளோட உடல் விரிய ஆரம்பிச்சுச்சு

முன்ன மாதிரி உயரம் அவளுக்கு வந்துச்சு ,அவளால அந்த சின்ன வீட்டுக்குள்ள நிக்க முடியல

அதனால அந்த முயல் சொன்ன விசிறியை மட்டும் எடுத்துக்கிட்டு தோட்டத்துக்கு போனா

ஆனா அங்க அந்த முயலை காணோம் அப்ப திடீர்னு அவளோட உயரம் குறைய ஆரம்பிச்சுச்சு ,

திரும்பவும் அவளோட உயரம் சின்னதா மாறிடுச்சு ,இத பார்த்த புழு ஒன்னு அந்த காளானை எடுத்து சாப்பிடுன்னு சொல்லுச்சு

ஆலிஸ்சும் உடனே ஒரு காளானை எடுத்து சாப்பிட்டா , உடனே அவளோட உடம்பு திரும்பவும் பெருசா மாறிடுச்சு

அந்த புழு கிட்ட தன்னை வெளிய கொண்டுபோய் விட சொல்லி கேட்டா ஆலிஸ்

அப்ப மரத்து மேல இருந்த ஒரு பூனை சொல்லுச்சு ,அதுக்கு நீ அந்த குகைக்கு போகணும்னு சொல்லுச்சு

உடனே ஆலிஸ் அந்த குகைக்குள்ளே போனா ,அங்க ஒரு மாயாவி இருந்தான்

அவன்கிட்ட வெளியில போக வழி கேட்டு அழுதா ஆலிஸ் ,அதுக்கு அந்த மந்திரவாதி நான் உனக்கு ஒரு விடுகதை சொல்றேன் அதுக்கு நீ சரியா பதில் சொன்னானா உனக்கு வழி சொல்றேன்னு சொன்னான்

ஆலிஸ் அதுக்கு சரினு சொன்னா ,அப்பத்தான் மாயாவி கேட்டான் ” ஏன் காகங்கள் கருப்பா இருக்குனு ”

ஆலிஸ்க்கு அந்த கேள்விக்கு விடை தெரியல ,அதனால் மாயாவிகிட்ட பதில் தெரியாதுன்னு சொன்னா ,ஆனா திரும்பவும் அதே கேள்வியை மாயாவிகிட்ட கேட்டா ஆலிஸ்

எனக்கும் அந்த கேள்விக்கு விடை தெரியாது ,நீ ஒருத்திதான் பதில் தெரியலைனாலும் அந்த கேள்விய திரும்பி என்கிட்ட கேட்ட அதனால உனக்கு நான் வெளிய போக வழி சொல்றேன்னு சொல்லி ஒரு கதவை காமிச்சான் மாயாவி

அதுவெளியா போன ஆலிஸ் ஒரு பெரிய மலை பிரதேசத்துக்குள்ள போனா ,அங்க ஒரு பெரிய அரண்மனை இருந்துச்சு

அந்த அரண்மனை தோட்டத்துல ஒரு பொல்லாத அரசி இருந்தா ,அவ தன் கூட போட்டி போட்டு தோத்துப்போறவங்களை சீட்டு கட்டா மாத்தி அங்க நிக்க வச்சிருந்தா

அந்த அரசிய பார்த்து வெளியில போறதுக்கு வழி கேட்டா ஆலிஸ் ,அப்ப அந்த அரசி சொன்னா என்கூட நீ பந்து விளையாடனும் நீ ஜெயிச்சா உன்ன வெளியில கொண்டு போய் விடுறேன்

ஆனா நீ தோத்து போய்ட்டா உன்னையும் சீட்டு கட்டா மாத்தி இந்த நிக்க வச்சுடுவேன்னு சொன்னா

இத கேட்ட ஆலிஸ் வேறு வழி இல்லாம அந்த அரசி கூட பந்து விளையாட ஆரம்பிச்சா

ஆலிஸ் அடிச்ச பந்து எல்லாத்தையும் அந்த முயல் வந்து தட்டி விட்டுச்சு

அதனால அந்த அரசி ஜெயிச்சிட்டா , உடனே தன்னை சீட்டு கட்டா மாத்த போறாங்கன்னு பயந்து போனா ஆலிஸ்

அப்பத்தான் அந்த அரசி பேச ஆரம்பிச்சா ,நீ எங்க எல்லாரையும் ரொம்ப தொல்லை பண்ணிட்ட அதனால உனக்கு பெரிய தண்டனை கொடுக்க போறோம்னு சொன்னா

அப்ப அங்க வந்த முயல் , புழு மற்றும் அந்த மாயாவி எல்லாரும் ஆலிஸ் என்ன பதில் சொல்ல போறான்னு அவளோட காத்துகிட்டு இருந்தாங்க

அப்பதான் ” போதும் தூங்குனது வா வீட்டுக்கு போகலாம்னு ” ஆலிசோட அக்கா குரல் கேட்டுச்சு

ஆலிஸ் மெதுவா கண் விழிச்சு பார்த்தா அங்க புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்த அவளோட அக்கா வீட்டுக்கு போக தயாரா இருந்தா

அப்பத்தான் ஆலிஸ்க்கு புரிஞ்சது இவ்வளவு நீரம் நாம் கண்டது கனவுன்னு ,இருந்தாலும் அவளுக்கு மிக பெரிய அட்வான்ச்சர் செஞ்ச திருப்தி அவளுக்கு இருந்துச்சு