பெற்றோர் கவனத்திற்கு இந்த கதையில் கத்தி ,மரணம் ,கொலை போன்ற வார்த்தைகள் பயன்படுத்த பட்டுள்ளன ,குழந்தைகளுக்கு இவற்றை கற்பிக்க விருப்பம் இல்லாதவர்கள் இந்த கதையை தொடர்ந்து வாசிக்க வேண்டாம்
Ali Baba And The Forty Thieves Story in Tamil – அலி பாபாவும் நாற்பது திருடர்களும் :- முன்பொரு காலத்துல பாக்தாத் நகரம்னு ஒரு ஊரு இருந்துச்சு
அந்த ஊருல அலிபாபானு ஒரு தம்பியும் , காசிம்னு ஒரு அண்ணனும் அவுங்க அப்பாவோட வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,

அதுல காசிம் ரொம்ப சோம்பேறியாவும் ரொம்ப கெட்ட குணம் உள்ளவனாவும் இருந்தான் ,

ஆனா அலிபாபா ரொம்ப சுறுசுறுப்பாவும் ரொம்ப நல்லவனாவும் இருங்தான் . காசிம் எப்பவும் சோம்பேறித்தனமா வேலை ஏதும் செய்யாம வீட்டுலயே படுத்து கிடப்பான்

ஆனா அலிபாபா எல்லா வேலையும் செஞ்சு எல்லார் கிட்டயும் நல்ல பேர் எடுத்திருந்தான்

அவுங்க அப்பா இறந்ததும் காசிம் ஒரு பொல்லாத பேராசை பிடிச்ச பணக்கார பொண்ண கல்யாணம் பண்ணி ரொம்ப சுகவாசியா வாழ ஆரம்பிச்சான்

ஆனா அலிபாபா ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணி தன்னோட உழைப்புல வாழ்க்கை நடத்த ஆரம்பிச்சான்

அவன் பகல்ல காட்டுக்கு போயி விறகுவெட்டி சம்பாதிக்க ஆரம்பிச்சான்

அப்படி ஒருநாள் விறகு வெட்டி எடுத்துக்கிட்டு வீட்டு வரும்போது , 40 திருடர்கள் ஒரு குகைக்கு முன்னாடி நிக்கிறத பார்த்தான்

அவுங்க தங்களோட குதிரை முதுகுல நிறய முட்டைகளை வச்சிருந்தாங்க

அப்பத்தான் அந்த திருடர்களோட தலைவன் “திறந்திடு மாய கதவே சீசேம்” அப்படினு ஒரு மந்திரத்தை சத்தமா சொன்னான்

உடனே அந்த குகையோட கதவு மெதுவா திறக்க ஆரம்பிச்சுச்சு,குதிரைல இருந்த எல்லா திருடர்களும் ஒவ்வொருத்தரா உள்ள போனாங்க

எல்லா குதிரையும் உள்ள போனதுக்கு அப்புறமா , அந்த தலைவன் “மூடிடு மாய கதவே சீசேம்” னு திரும்ப ஒரு மந்திரத்தை சொன்னான்

உடனே கதவு மூடிடுச்சு ,அதுக்கு அப்புறமா வெறும் கையோட வெளிய வந்த திருடர்கள் மந்திரம் சொல்லி அந்த கதவ மூடுனாங்க

இத எல்லாம் ஒளிஞ்சிருந்து பார்த்துகிட்டே இருந்தான் அலிபாபா

அந்த திருடர்கள் நாற்பது பேரும் போனதுக்கு அப்புறமா அந்த குகைக்கு வந்தான் அலிபாபா

அந்த திருடர் தலைவன் சொன்ன மாதிரி “திறந்திடு மாய கதவே சீசேம்” னு மந்திரத்தை திரும்ப சொன்னான் ,உடனே கதவு மெதுவா தொறந்துச்சு

உள்ள போன அலிபாபாவுக்கு ஒரே ஆச்சர்யம் ,அங்க நிறய தங்கமும் வைரமும் கொட்டி கிடந்துச்சு

அப்பத்தான் அலிபாபாவுக்கு புரிஞ்சுச்சு இவுங்க எல்லாரும் திருடர்கள் ,அவுங்க திருடுன எல்லா பொருளையும் இங்க ஒளிச்சி வச்சிருக்காங்கனு

உடனே ஒரு சின்ன பைல கொஞ்சம் தங்க காசுகளை மட்டும் எடுத்துகிட்டான் அலிபாபா ,மந்திரம் சொல்லி அந்த குகையோட கதவ மூடுன அலிபாபா வீட்டு நடக்க ஆரம்பிச்சான்

வீட்டுக்கு வந்த அலிபாபா தான் கொண்டு வந்த தங்கத்தோட அளவ சோதிக்க நினைச்சான் ,அவன்கிட்ட திராசு இல்லாததால தன்னோட அண்ணன் வீட்டுக்கு போய் திரசு கேட்டான்

பேராசை காரியான அண்ணி தான் அங்க இருந்தா , அலிபாபா என்ன அளக்குறதுக்கு திரசு கேக்குறானு ஒரு சந்தேகம் வந்துச்சு

உடனே புளி கொஞ்சம் எடுத்து திராசோட அடியில கொஞ்சமா தடவி கொடுத்தா , எப்படியும் அலிபாபா அளக்கும்போது அந்த பொருள் இந்த புளியில கொஞ்சம் ஓட்டும் நாம் கண்டுபிடிச்சிடலாம்னு நினச்சா

அதே மாதிரி தங்க நாணயத்தை அளந்தான் அலிபாபா , அப்ப ஒரு தங்க காசு புளியில ஒட்டிகிடுச்சு
அத கவனிக்காம திராச அண்ணிகிட்ட திருப்பி கொண்டுபோய் கொடுத்தான் அலிபாபா ,

தங்க காசு ஒட்டிக்கிட்டு இருக்குறத பார்த்த அந்த பேராசை காரிக்கு ரொம்ப பேராசை ஏற்பட்டுச்சு ,

உடனே காசிம கூப்பிட்டு அலிபாபாவுக்கு எப்படி தங்க காசு கிடைச்சுதுனு கேட்டு அவளுக்கும் நிறய தங்க காசு கொண்டுவர சொல்லி நச்சரிச்சா அவ

அலிபாபா வீட்டுக்கு வந்த காசிம் நாற்பது திருடர்களோட குகை எங்க இருக்குதுனும் ,

அந்த கதவ தொறக்கர மந்திரத்தையும் மூடுற மந்திரத்தையும் அலிபாபா கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டான்

உடனே நேரா அந்த குகைக்கு போய் “திறந்திடு மாய கதவே சீசேம்” னு மந்திரம் சொன்னான் , உடனே அந்த மந்திர கதவு தொறந்துச்சு , உள்ளேபோன காசிம் அடுத்த மந்திரத்த சொல்லி கதவ மூடுனாண்

உள்ள போன காசிம் அங்க இருக்குற தங்கத்தை எல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டு வர மூட்டையா கட்டுனான்

தங்கம் கிடைச்ச சந்தோஷத்துல மந்திர கதவை தொறக்குற மந்திரத்தை மறந்துட்டான் காசிம்

அவன் எவ்வளவு முயற்சி செஞ்சும் மந்திரம் அவனுக்கு ஞாபகத்துக்கு வரவே இல்ல சோர்ந்து போன காசிம் அங்கேயே படுத்து தூங்கிட்டான்

திரும்ப வந்த திருடர்கள் காசிம பார்த்ததும் ரொம்ப கோபப்பட்டாங்க ,ஒரு பெரிய கத்திய எடுத்து அவனை வெட்டி கொன்னுட்டாங்க

இரவு ஆகியும் காசிம் வீட்டுக்கு வராதத தெரிஞ்சிகிட்ட அலிபாபா தன்னோட அண்ணனை தேடி புறப்பட்டான்

குகைக்குள்ள போன அலிபாபா காசிம் வெட்டுப்பட்டு கிடைக்கிறத பார்த்ததும் ரொம்ப வருத்தப்பட்டான்

காசிம தூக்கிகிட்டு வீட்டுக்கு வந்தான் அலிபாபா , அவுன் வீட்டுல வேலை செஞ்ச பணிப்பெண்ணான மார்ஜியானவ கூப்பிட்டு நடந்தத சொன்னான்

புத்திசாலியான மார்ஜியானா காசிம இப்படியே எல்லாரும் பார்த்தாங்கனா எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சிடும் அதனால எனக்கு தெரிஞ்ச தையல் காரனை கூட்டிட்டு வந்து காசிமோட காயங்களை தச்சு எல்லாருக்கும் காமிப்போம்னு சொன்னா

உடனே வெளிய போன மார்ஜியானா தையல் கடை காரன்கிட்ட கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் பொய்யும் சொன்னா

நீங்க கண்ண கட்டிக்கிட்டு வந்து இறந்துபோன ஒருத்தரோட காயத்தை தச்சு கொடுத்தா 100 தங்க காசு கொடுக்கிறதா சொன்னா மார்ஜியானா

உடனே அந்த தையல் காரனும் கண்ண கட்டிக்கிட்டு அலிபாபா வோட வீட்டுக்கு வந்து காசிமோட காயங்களை தச்சான்,அதுக்கு அப்புறமா காசிமோட மனைவிக்கும் ஊர் கரங்களுக்கு சொல்லிட்டு காசிமோட இறுதி சடங்குகளை செஞ்சான் அலிபாபா

இந்த நேரத்துல குகைக்கு திரும்பி வந்த திருடர்கள் காசிமோட உடம்பு அங்க இல்லாதத பார்த்தாங்க ,அப்ப இந்த குகை ரகசியத்தை தெரிஞ்சிகிட்ட இன்னொருத்தன் இருக்கான்னு முடிவு பண்ணுனாங்க

உடனே அதுல இருந்து ஒரு திருடன் மட்டும் மாறுவேஷம் போட்டுக்கிட்டு பாக்தாத் நகரத்துல புதுசா நிறைய பணம் வச்சிருக்கவங்கள எல்லாம் கண்காணிக்க ஆரம்பிச்சான்

அப்பத்தான் நிறய தங்க காசுகள் வச்சிருந்த தையல் காரண பத்தி தெரிய வந்துச்சு ,உடனே அவன்கிட்ட போன திருடன் நிறய தங்க காசு கொடுத்து உன்மையை தெரிஞ்சுக்கிட்டான்

அலிபாபாவோட வீட்ட கண்டுபிடிக்க திரும்பவும் கண்ணை கட்டிக்கிட்ட தையல் காரன் மார்ஜியானா போன பாதையிலேயே போயி அலிபாபாவோட வீட்டை காட்டி கொடுத்தான்

உடனே ஒரு சாக்பீஸ எடுத்து ஒரு பெருக்கல் கூறிய கதவு மேல அடையாளத்துக்கு போட்டான்

திரும்ப குகைக்கு வந்த திருடன் தான் அந்த வீட்டை கண்டுபிடிச்ச கதையையும் ,பெருக்கல் குறி போட்டிருக்கிற வீடுதான் அலிபாபா வோட வீடுனும் சொன்னான்

வீட்டு கதவுல புதுசா பெருக்கல் குறி இருக்குறத பார்த்தா புத்திசாலியான மார்ஜியானா

இதுல ஏதோ மர்மம் இருக்குனு புரிஞ்சிகிட்ட மார்ஜியானா அங்க இருக்குற எல்லா வீட்டுலயும் பெருக்கல் குறி போட்டா

நடு ராத்திரி வந்த திருடர்களுக்கு ஒரே குழப்பம் அதனால திரும்பி போய்ட்டாங்க

மறுநாள் எண்ணெய் கொண்டுவர்ற பீப்பாய் கள்ள எல்லா திருடர்களும் ஒளிஞ்சுக்கிட்டாங்க

திருடர்களோட தலைவன் மட்டும் அங்க இருந்த எல்லா வீட்டோட ஆளுங்ககிட்டயும் பேச்சு கொடுத்துகிட்டே வந்தான்

அப்ப அங்க வந்த மார்ஜியானா பீப்பாய் குள்ள திருடர்கள் ஒளிஞ்சிருக்குறத தெரிஞ்சிக்கிட்டு ஒரு ஐடியா பண்ணுனா

வேலைகாரங்கள கூப்பிட்டு பெரிய அண்டாவுல எண்ணெயை கொதிக்க கொதிக்க காச்ச சொன்னா மார்ஜியானா

பீப்பாய மெதுவா தொறந்து ஒவ்வொரு குடம் கொதிக்கிற எண்ணெயை ஊத்துனா அதுக்குள்ள

எல்லா திருடர்களும் அந்த எண்ணை பட்டு உள்ளேயே செத்துபோய்ட்டாங்க

அதுக்கு அப்புறமா அலிபாபாவோட வீட்டுக்குள்ள திருடர்களோட தலைவன் இருக்குறத தெரிஞ்சிகிட்டா மார்ஜியானா

உடனே ஒரு டீ கோப்பையை எடுத்துக்கிட்டு மெதுவா அந்த தலைவனுக்கு பின்னாடி போய் நின்னா மார்ஜியானா

அந்த திருடன் அசந்து இருந்தப்ப அந்த கோப்பையால ஒரே அடி அடிச்சு அவனையும் கொன்னுட்டா மார்ஜியானா

மிக பெரிய ஆபத்துல இருந்து தன்னை காப்பாத்துன மார்ஜியானா வுக்கு நிறைய பொற்காசுகள் கொடுத்து நன்றி சொன்னான் அலிபாபா
