Mulla’s Big Pot – முல்லாவின் பெரிய பானை:முல்லாவுக்கு எப்பவும் விருந்தோம்பல் சரியா செய்யணும்ன்ற எண்ணம் இருந்துச்சு அதனால அவர் வீட்டுக்கு யார் வந்தாலும் நல்லா விருந்து வச்சு அனுப்புவாரு ஒண்ணுமே முடியலனாலும் ஒரு சூப்பாவது வச்சு அவங்கள நல்லா கவனிச்சு அனுப்புவாரு முல்லா

முல்லா ஒரு நாள் பக்கத்து ஊருக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துச்சு அப்படி பயணிக்கிறப்ப முல்லாவும் அவரோட மனைவியும் அங்கேயே கொஞ்ச நாள் அங்க தங்க வேண்டியது தா போச்சு அதனால அங்கேயே இருந்த முல்லாவும் அவரோட மனைவியும் 10 நாளுக்கு அப்புறம் தான் தங்களோட வீட்டுக்கு வந்தாங்க

அவங்க வீட்டுக்குள்ள வந்த ஒரு நிமிஷத்திலேயே முல்லாவோட நண்பர்கள் கொஞ்ச பேரு முல்லாவ பார்க்க முல்லா வீட்டுக்கு வந்தாங்க,முல்லாவுக்கு அவங்கள பார்த்த உடனே ரொம்ப சந்தோசமாயிருச்சு அவங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது குடு அப்படின்னு சொல்லி அவரோட மனைவி கிட்ட சொன்னாரு முல்லா

கொஞ்ச நேரம் கழிச்சு முல்லாவ சமையல் அறைக்குள்ள கூப்பிட்டாங்க முல்லாவோட மனைவி அங்க போய் பார்த்தப்பதான் தெரிஞ்சுச்சு பத்து நாள் வீட்ல இல்லாததுனால ஒரு காய்கறிகளோ சமையல் செய்வதற்கான பொருட்களோ எதுவுமே அங்கு இல்லை என்கிற உண்மைய சொன்னாங்க முல்லாவோட மனைவி

அடடா நண்பர்களுக்கு கொடுக்குறதுக்கு நம்ம கிட்ட இன்னைக்கு எதுவுமே இல்லையே அவங்களை எப்படி சமாளிச்சு அனுப்புறது அப்படின்னு யோசிச்சாரு முல்லா அப்பதான் முல்லாவோட மனைவி சொன்னாங்க நம்ம வீட்டுல சாப்பிடுவதற்கு ஒரு பொருளும் இல்லை என்கிறத சொல்லாதீங்க அவங்க நம்மள பத்தி வேற மாதிரி நினைச்சிருவாங்க நம்ம ஏழ்மையில் வாழ்ந்துகிட்டு இருக்கோம்னு என்று நினைச்சு நமக்கு உதவுறதுக்கு அவங்க வேற ஏதாவது செய்வாங்க போல இருக்கு அதனால அவங்கள சூசகமா வேற ஏதாவது காரணம் சொல்லி அனுப்பி வைங்க அப்படின்னு சொன்னாங்க முல்லாவோட மனைவி

அப்பத்தான் முல்லா அங்க இருந்த ஒரு பெரிய பாத்திரத்தை பார்த்தாரு உடனே அதை எடுத்துக்கிட்டு தன்னோட நண்பர்கள்கிட்ட வந்தாரு

நண்பர்களே இங்க பாருங்க இவ்ளோ பெரிய சட்டின்னு, இந்த சட்டி நிறைய உங்களுக்கு உணவு செஞ்சு கொடுக்கணும்னு எனக்கு ஆசை அதனால கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க இதுல சூப் வச்சம்னா எப்படியும் ஒரு நான்கு ஐந்து மணி நேரத்துல சூப் ரெடியாயிடும் அதுக்காக விறகுகளை நான் பிறக்க போறேன் விறகு பிறக்கிறதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும் கொஞ்சம் பொறுமையா இருங்க சட்டி நிறைய சூப் வைத்து நம்ம எல்லாரும் சாப்பிடலாம் அப்படின்னு சொன்னாரு முல்லா

முல்லாவோட நண்பர்களுக்கு முல்லா இப்படி பேசினா அதுல ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு அவ்வளவு நேரம் எல்லாம் எங்களால காத்திருக்க முடியாது எங்களுக்கு வேற வேலை இருக்கு நாங்க போயிட்டு வரேன்னு சொல்லிட்டு அங்க இருந்து போயிட்டாங்க

அப்பத்தான் முல்லாவோட மனைவி சொன்னாங்க நல்ல புத்திசாலியா தான் இருக்கீங்க நம்மளோட நிலைமையை சொல்லாமலும் அவங்க தப்பா புரிஞ்சுக்கிறது தடுத்தும் இப்படி ஒரு பொய் நாடகத்தை அரங்கேத்தி அவங்கள அனுப்பி வச்சிட்டீங்க அப்படின்னு சொன்னாங்க
