Mulla Eats Groundnut – முல்லா தின்ன வேர்க்கடலை

Mulla Eats Groundnut – முல்லா தின்ன வேர்க்கடலை :முல்லாவும் அவருடைய மனைவியும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்ததனால அவங்க குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு,ஆனா கொஞ்ச நாளா முல்லா வோட மனைவி ரொம்ப கஞ்சத்தனம் செய்ய ஆரம்பிச்சத கவனிச்சாரு முல்லா

Happy Simple Life Turning to Noticing Miserliness

முல்லாவோட மனைவி செய்யுற புது கஞ்சத்தனத்தை முல்லாவால சகிச்சிக்கிடவே முடியல ,வீட்டுக்கு வாங்கிட்டு வர்ற காய்கறிகள்ள இருக்குற கெட்டுப் போன காய்கறிய கூட தூக்கி போடாம அதையும் சேர்த்து குழம்பு வைக்கிறத பார்த்த முல்லா வரவர உனக்கு கஞ்சத்தனம் கூடிக்கிட்டே போகுது அப்படின்னு சொன்னாரு மனைவிகிட்ட

Confronting the Spoiled Vegetables

அதுக்கு முல்லாவோட மனைவி சொன்னாங்க இப்ப காய்கறிகள் ஓட விலை எல்லாம் ஏறி போயிருச்சு,நம்மள மாதிரி சாமானியர்கள் கொஞ்சம் சிக்கனமா இருக்கணும் , அதனாலதான் அதை தூக்கி போடறதுக்கு எனக்கு மனசு வரல அப்படின்னு சொன்னாங்க

Wife's Defense on Rising Prices

இதையெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைச்சாரு முல்லா,அதுக்கு எதாவது திட்டம் போடணும்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாரு , அப்பத்தான் அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு சந்தையில் இருந்து திரும்பி வரும்போது அவிச்ச நிலக்கடலை ஒரு கிலோ வாங்கிட்டு வந்தாரு

Mulla's Plan and Buying Groundnuts

வீட்டுக்கு வந்த முல்லா சமையல் செஞ்சு கிட்டு இருந்த தன்னோட மனைவிக்கு முன்னாடி உட்கார்ந்துகிட்டு நிலக்கடலைய உரிச்சு சாப்பிடாம முழுசாவே வாய்க்குள்ள போட்டு நறு நறுன்னு கடிச்சு சாப்பிட்டாரு ,இதை பார்த்த முல்லாவோட அதிகம் ஏன் இப்படி தோலோட சாப்பிடுறீங்க உடம்புக்கு இது நல்லது இல்ல ஏதவது வேற மாதிரி ஆயிட போகுது அப்படின்னு சொன்னாங்க

Mulla Eating Whole Groundnuts

அப்பத்தான் முல்லா சொன்னாரு நிலக்கடலை விக்கிற விலை ரொம்ப கூடிப்போச்சு அதனாலதான் அதை தோல தூக்கி போடுறதுக்கு எனக்கு மனசு வரல அதனாலதான் இப்படி முழுசா சாப்பிட்டுகிட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னாரு, தன்னுடைய மனைவி ரொம்ப கஞ்சத்தனம் படுத்த தான் முல்லா இப்படி நாடகம் போட்டி தனக்கு புரிய வைக்குறாருனு தெரிஞ்சி போச்சு , அன்னையில இருந்து ரொம்ப கஞ்சத்தனம் படாமல் சிக்கனமா வாழ்க்கை நடத்த தொடங்கினாங்க

The Lesson Learned and Resolution