The Monkey & The Dolphin Story in Tamil – குரங்கும் டால்பினும்:- ஒரு கப்பல்ல ஒரு கூட்டம் பயணம் செஞ்சுகிட்டு இருந்தாங்க
![The Monkey & The Dolphin Story in Tamil](https://t3x.b82.myftpupload.com/wp-content/uploads/2021/05/The-Monkey-The-Dolphin-Story-in-Tamil-1024x576.jpg)
அதுல ஒரு பயணி ஒரு குரங்கையும் கையோட கூட்டிட்டு வந்தாரு
ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு அந்த கப்பல் முழுக ஆரம்பிச்சது
தண்ணில விழுந்த குரங்கை யாராவது வந்து என்ன காப்பாத்துங்கன்னு ரொம்ப சத்தம் போட்டு கத்துச்சு
![The Monkey & The Dolphin Story in Tamil](https://t3x.b82.myftpupload.com/wp-content/uploads/2021/05/2-12-1024x327.jpg)
அப்பத்தான் அந்த ஒரு டால்பின் வந்து அந்த குரங்கை காப்பாத்துச்சு
மெதுவா நீந்தி அங்க இருந்த ஒரு தீவுக்கு போனது அந்த டால்பின்
![The Monkey & The Dolphin Story in Tamil](https://t3x.b82.myftpupload.com/wp-content/uploads/2021/05/3-9-1024x295.jpg)
மெதுவா இறங்குன அந்த குரங்க பாத்து கேட்டது அந்த டால்பின் இந்த தீவ பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா
கொழுப்பெடுத்த அந்த குரங்கு இந்த தேவோட ராஜா என் நண்பர்தான் அப்படின்னு சொல்லுச்சு
அந்த தீவுல யாரும் இல்லைனு தெரிஞ்ச அந்த டால்பின்
![The Monkey & The Dolphin Story in Tamil](https://t3x.b82.myftpupload.com/wp-content/uploads/2021/05/4-4-1024x301.jpg)
நீ அரசனாகுற நேரம் வந்துடுச்சு அப்படின்னு சொல்லுச்சு
நான் அரசனா அது எப்படி நடக்கும்னு குழப்பத்தோட கேட்டுச்சு குரங்கு
தடார்னு தண்ணிக்குள்ள குதிச்சி டால்பின் இப்ப இந்த தீவுல நீ மட்டும்தான் இருக்க அதனால நீதான் இனிமே ராஜான்னு சொல்லுச்சு
தன்னோட முட்டாள்தனத்த நினச்சு வறுத்த பட்டுச்சு கொரங்கு