THE NUTCRACKER – குட்டி பொம்மை கதை :- ஒரு ஊருல தியானு ஒரு பொண்ணு இருந்தா ,அவளுக்கு அவுங்க மாமானா ரொம்ப பிடிக்கும்
அவரு ஒருநாள் தியா வீட்டுக்கு வந்தாரு , அது கிறிஸ்துமஸ் நேரம்கிறதுனால தியாவுக்கு ஒரு பரிசும் கொண்டுவந்தாரு அவுங்க மாமா
அந்த பரிச வாங்குனா தியாவுக்கு ரொம்ப சந்தோசம் ,வேக வேகமா அந்த பரிசை பிரிச்சி பார்த்தா
அதுல ஒரு குட்டி பொம்மை இருந்துச்சு ,அது நட்கிராக்கர் பொம்மை
அந்த பொம்மை குட்டியா இருந்தாலும் ரொம்ப அசிங்கமா இருந்துச்சு ,
இருந்தாலும் தன்னோட மாமா கொடுத்த பொம்மையை எடுத்து அதேமாதிரி போர் வீரர்கள் இருக்குற இடத்துல கொண்டுபோய் வச்சா தியா
அன்னைக்கு ராத்திரி தியாவுக்கு விசித்திரமான ஒரு கனவு வந்துச்சு
அந்த கனவுல ,அவ வீடு முழுசும் நிறய எலிங்க அங்கிட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சுங்க
அதுங்களோட சேர்த்து ஏழு தலை எலி ராணியும் அங்க வந்து எல்லாத்தையும் பிச்சி போட ஆரம்பிச்சுச்சு
அப்ப வீரனான அந்த நட்கிராக்கர் பொம்மை தன்கூட இருந்த போர் வீரர்கள் பொம்மை கிட்ட பேச ஆரம்பிச்சுச்சு
நண்பர்களே நம்ம தியாவுக்கு ஆபத்து ,வாங்க எல்லாரும் சேர்ந்து அந்த எலிகளை அடித்து விரட்டுவோம்னு சொல்லுச்சு
உடனே பக்கத்துல இருந்த போர் வீரர்கள் பொம்மைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து தரையில இறங்குச்சுங்க
அப்பத்தான் அட்டகாசம் செஞ்சுகிட்டு இருந்த எலிங்க எல்லாத்தையும் அடிச்சு தொரத்த ஆரம்பிச்சாங்க அந்த குட்டி போர்வீரர்கள் எல்லாம்
குட்டி கத்தி, குட்டி துப்பாக்கின்னு எல்லாத்தையும் பயன்படுத்தி எலிகளை தொரத்த ஆரம்பிச்சாங்க
அப்பத்தான் எல்லா எலிகளும் சேர்ந்து நட்கிராக்கர் பொம்மைய தாக்க ஆரம்பிச்சுச்சுங்க
ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த எலிங்க கூட சண்ட போட ஆரம்பிச்சுச்சு அந்த நட்கிராக்கர் பொம்மை
அப்பா டக்குனு கனவு கலைஞ்சு முழிப்பு வந்திடுச்சு தியாவுக்கு
தனக்கு வந்த கனவ பத்தி எல்லாருகிட்டயும் சொன்னா தியா,அத எல்லாரும் சாதாரன கனவா எடுத்துகிட்டாங்க
உடனே அவுங்க மாமாகிட்ட போன தியா தன்னோட கனவுல நடந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா
அப்பதான் நட்கிராக்கர் பொம்மையோட உண்மையான கதையை அவளுக்கு சொன்னாரு அந்த மாமா
ஒரு அழகான இளவரசி இருந்த அரண்மனையில ஒரு எலி ராணி இருந்தாங்க ,அவுங்களோட ஏழு எலி குட்டிகளை அங்க இருந்த காவலர்கள் எலி பொறி வச்சு கொன்னுட்டாங்க
அதனால அந்த இளவரசிக்கு சாபம் கொடுத்தாங்க அந்த எலி ராணி ,உடனே அந்த அழகான இளவரசி கிழவியா மாறிட்டாங்க,அந்த சாபத்துக்கு விமோச்சனமா அந்த இளவரசிக்காக தன்னோட அழகை கொடுக்குற ஒருத்தர் இளவரசி முன்னாடி பாதாம் கொட்டைய கடிக்கணும்னு சொன்னாங்க
இளவரிசைய காப்பாத்த அந்த நாட்டோட தளபதி அந்த கொட்டைய கடிச்சி ஒடச்சாரு ,அதுக்கு அப்புறமாத்தான் அவருக்கு நட்கிராக்கர்னு பேர் வந்துச்சு
அந்த கொட்டைய கடிச்சதும் அந்த தளபதியோட முகம் ரொம்ப அவலட்சணமான மாறிடுச்சு ,இருந்தாலும் இளவரசி திரும்பவும் நல்லா மாறிட்டாங்க
அதனால நல்ல குழந்தைகளுக்கு பாதுகாப்பா இருக்க நட்கிராக்கர் பொம்மையை பரிசா கொடுக்கிறது வழக்கமா மாறிடுச்சு
இந்த கதையை கேட்ட தியாவுக்கு இப்ப அந்த அசிங்கமான நட்கிராக்கர் பொம்மை ரொம்பா அழகா தெரிஞ்சது
தனக்கு எப்பல்லாம் ஆபத்து வரும்னு நினைக்குறளோ அப்பல்லாம் அந்த நட்கிராக்கர் பொம்மைக்கிட்ட போயி நிப்பா தியா
தன்னுடைய அழகை கொடுத்து இளவரசியை காப்பாத்துன நட்கிராக்கர் பொம்மை தன்னையும் காப்பாத்தும்னு ஒரு நம்பிக்கைய வளர்த்து கிடா தியா ,அதுக்கு அப்புறமா இந்த உலகத்துல இருக்குற அவளுக்கு பயம் கொடுக்குற எல்லா விஷயத்தையும் தைரியா எதிர்கொள்ள ஆரம்பிச்சா தியா
குழந்தைகளா இந்த நட்கிராக்கர் பொம்மை மாதிரி ,நம்மள பாதுகாக்க இந்த உலகத்துல நமக்கு நம்ம அப்பா அம்மா இருக்காங்க ,உங்களுக்கு பயமா இருந்துச்சுனா உடனே உங்க அம்மா அப்பாகிட்ட போய் சொல்லுங்க ,அவுங்க உங்கள நல்ல அறிவுரை சொல்லி காப்பாத்துங்க