பட்டணத்து எலியும் கிராமத்து எலியும்
ஒரு காலத்துல பட்டணத்து எலியும் கிராமத்து எலியும் ரொம்ப நண்பர்களா இருந்தாங்க ஒரு நாள் அந்த கிராமத்து எலி பட்டணத்து எலிய தன்னோட இருப்பிடத்துக்கு விருந்துக்கு கூப்டுச்சு
உடனே ரெண்டு எலியும் கிராமத்து எலி வசிச்சுட்டு வந்த வயல் வெளியில் இருக்குர வளைக்கு பே
ஈச்சுங்க விருந்தினரான பட்டணத்து எலிக்கு அன்னைக்கு புதுசா சேகரச்சி நெல் மணிகளை பட்டணத்து
எலிக்கு கொடுத்துச்சு
புது நெல்மணிகளை சாப்ட பட்டணத்து எலிக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அடடா என்ன ஒரு
நல்ல விருந்து சொன்ன பட்டணத்து எலி என்ன தான் புது தானியங்களா இருந்தாலும் எங்க பட்டணத்துல இருக்கர மாதிரி துரித உணவுகள்
சுவையான உணவுகளும் உங்களுக்கு கிடைக்காதுனு சொல்லுச்சு அந்த பட்டணத்து எலி
நாங்க சாப்பிடர நல்ல சாப்பாடு உனக்கும் கொடுக்கனும்னு ஆசப்படுரேனு சொன்ன அந்த எலி
அந்த கிராமத்து எலிய தன்னோட இருப்பிடத்துக்கு விருந்துக்கு வரனும்னு வேண்டி கேட்டுகிட்டுச்சு அந்த அழைப்ப ஏத்துகிட்ட அந்த கிராமத்து எலி பட்டணத்து எலி வசிச்சுட்டு வந்த பெரிய வீட்டோட
பொந்துக்கு போச்சு
அங்க சுவையான உணவுகள் கிராமத்து எலிக்கு கொடுத்து சாப்பிட சொல்லுச்சு பட்டணத்து எலி
அப்ப திடீர்னு அந்த பொந்துக்கு பக்கத்துல யாரோ நடக்குர மாதிரி சத்தம் கேட்டுச்சு
உடனே பயந்து போன அந்த எலிகள் அமைதியா சத்தம் போடாம இருந்துச்சுங்க
சில வினாடிகளுக்கு அப்புரமா அந்த உணவ சாப்பிட ஆரம்பிச்சுச்சு அந்த கிராமத்து எலி
அந்த நேரத்துல திடீர்னு பூனையோட சத்தம் கேட்டுச்சு . அதக் கேட்ட அந்த எலிகள் ஓடிப்போயி ஒளிஞ்சுகிடுச்சுங்க
அந்த பூன சத்தம் நின்னதுக்கு அப்புரமா அந்த கிராமத்து எலி சொல்லுச்சு
என்னதா நான் கிராமத்து வயல்ல வாழ்ந்துட்டு இருந்தாலும், தானியங்கள மட்டுமேசாப்டுகிட்டு இருந்தாலும் எனக்கு அங்க சுதந்திரம் கிடைச்சது
ஆனா உனக்கு எவ்வளவு சுவையான உணவு கிடைச்சாலும் அத நிம்மதியா சாப்பிட சுதந்திரமும்
தைரியமும் கிடைக்காது
அதனால் இந்த சுதந்திரம் இல்லாத பட்டணத்து வாழ்க்க எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டு
கிராமத்துக்கே போயிடுச்சு அந்த எலி