விவசாயியும் அவரது மனைவியும் – A Former and His Wife Kids Story with Moral: ஒரு கிராமத்துல ஒரு விவசாயி அவரோட மனைவி கூட வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவருக்கு எப்பவும் சலிப்பாவே இருக்கும் .
ஒவ்வொரு நாளும் தன்னோட விவசாய வேலைகளை முடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்து நான் அவ்வளது வேலை செஞ்சேன் ,நிறைய உழைச்சேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு
தன்னோட மனைவியையும் மட்டமா பேசிக்கிட்டே இருப்பாரு ,நான் தோட்டத்துல நிறைய உழைக்கிறேன் நீ வீட்டுல ஒண்ணுமே செய்றது இல்லைனு ஒரு நாள் சொன்னாரு
இத கேட்ட அந்த விவசாயியோட மனைவி இன்னைக்கு ஒருநாள் உங்க தோட்டத்துல நான் போயி வேலை செய்யிறேன் ,அதுக்கு பதிலா வீட்டு வேலைகளை நீங்க செய்ங்கனு சொல்லிட்டு தோட்டத்துக்கு போய்ட்டாங்க.
உடனே வீட்டு வேலைகளை சுலபமானதுனு நினச்சு செய்ய ஆரம்பிச்சாரு ,வீட்ட கூட்டி முடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு.
அடுத்ததா வீட்டு பசுவுக்கு தண்ணி வச்சு ,உணவு கொடுதாறு ,வீட்டு வாசல்ல இருந்த மரத்தோட இலைகளை கூட்டி சுத்தம் செய்ய வேண்டியது இருந்துச்சு அதையும் செஞ்சாரு
அதுக்கு அப்புறமா பக்கத்துக்கு கடைக்கு போயி உணவு தானியங்களை வாங்கிட்டு வந்தாரு ,வீட்டுக்கு பின்னாடி போயி காய்கறிகளை பரிச்சிட்டு வந்தாரு
அதுக்கு அப்புறமா சமையல் செய்யும் போதுதான் தெரிஞ்சது வீட்டு வேலைகள் செய்யிறது எவ்வளவு கஷ்டம்னு
அதுக்கு அப்புறமா பால் கறக்குறது ,பாத்திரம் கழுவுறது ,துணி துவைக்கிறதுனு நிறைய வேலைகள் மிச்சம் இருக்குறதையும் அவரு உணர்ந்தாரு
அப்பத்தான் அவருக்கு புரிஞ்சது ,இத்தனைநாள் தன்னோட வேலைகளையும் தன்னோட மனைவிதான் நிறைய செஞ்சாங்கன்னு ,இது தெரியாம அவுங்கள மட்டம் தட்டி பேசுனுத்த நினச்சு வறுத்த பட்டாரு
அவரோட மனைவி வந்ததுக்கு அப்புறமா அவுங்க கிட்ட மன்னிப்பு கேட்டாரு.